"நீ மட்டும் இல்லன்னு வை.." தூக்கத்தில் புலம்பிய கோபி.. மனமுடைந்த பாக்கியா.. பரபரக்கும் Baakiyalakshmi

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், அடுத்தடுத்து பல ட்விஸ்ட் அரங்கேறி வருவதால், ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Gopi speaks while sleep baakiya starts to cry

இதன் ஒவ்வொரு எபிசோடிலும், ஏதாவது ஒரு விஷயம் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை எகிற வைக்கும் வகையில் தான் அமைந்திருக்கும்.

அப்படி தான், ராதிகாவிடம் உண்மைகள் அனைத்தையும் கோபி உளறிக் கொட்ட, இனிமேல் இந்த தொடரில் தொடரில் என்ன நடக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்தடுத்து 'ட்விஸ்ட்'

பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா ஆகியோர் நெருங்கிய தோழிகளாக இருக்க, பாக்கியாவின் கணவரான கோபி செய்து வரும் தில்லாலங்கடி வேலைகள் தான் இந்த தொடரின் ஹைலைட். பாக்கியலட்சுமியை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்யத் துடியாய் துடிக்கிறார் கோபி. அது மட்டுமில்லாமல், யாரிடமும் சிக்கிக் கொள்ளாமல் இதற்கான முயற்சிகளில் கோபி ஈடுபட்டு வருகிறார்.

Gopi speaks while sleep baakiya starts to cry

கண்ணீர் விட்டு கதறிய ராதிகா

இவர் எப்போது சிக்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மகா சங்கமத்தின் போது, கோபி விவகாரம் அந்த வீட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவானது. இது ஒருபுறமிருக்க, ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகங்கள் உருவாக, நிச்சயமாக அவரின் குடும்பத்தை பார்த்தே ஆக வேண்டும் என முடிவெடுக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலையில் தான், குடித்து விட்டு ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, மனைவி என்று கூறி, பாக்கியாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காண்பிக்கிறார்.

Gopi speaks while sleep baakiya starts to cry

இதனைக் கண்டதும், கண்ணீர் விட்டு கதறும் ராதிகா, தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார். இது தொடர்பாக, கண்ணீருடன் ராதிகா கேள்விகளை கேட்க,  நீ என்னை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக தான், உண்மையை மறைத்தேன் என கோபி கூறுகிறார். இதனைக் கேட்டு நிலைகுலைந்த படி ராதிகா நிற்கிறார்.

புலம்பிய கோபி

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள ப்ரொமோ ஒன்று, ரசிகர்கள் மத்தியில் இன்னும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ராதிகாவின் வீட்டில் இருந்து, தனது வீட்டிற்கு போதையில் தள்ளாடிய படி வரும் கோபியை பாக்கியா மற்றும் எழில் இணைந்து, கட்டிலில் படுக்க வைக்கின்றனர். அப்போது, போதைக் கலக்கத்தில் புலம்பும் கோபி, "ப்ளீஸ். ரெண்டு பேரும் என்ன விட்டுட்டு போய்டாதீங்க. நீங்க ரெண்டு பேரு மட்டும் இல்லாம என்னால வாழவே முடியாது. நீ இல்லாம உயிரோடவே இருக்க மாட்டேன். உனக்காக மொத்த குடும்பத்தையும் விட்டுட்டு வரேன்னு சொன்னேன்ல. எனக்கு பாக்கியா'வ புடிக்கல. உன்ன தான் புடிச்சிருக்கு" என கூறுகிறார்.

Gopi speaks while sleep baakiya starts to cry

மனமுடைந்த பாக்கியா

இதனைக் கேட்டு கொண்டே நிற்கும் பாக்கியா, கணவரின் வார்த்தைகளால் மனமுடைந்து கண்ணீர் வடிக்க தொடங்குகிறார். பாக்கியா மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் கோபி குறித்த உண்மை, ஒரே நேரத்தில் தெரிய வந்தது போல காட்சிகள் அமைந்துள்ளதால், கோபியால் இனியும் தப்பிக்க முடியுமா என்ற கேள்வி தான் அதிகமாக எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Gopi speaks while sleep baakiya starts to cry

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Episode, Baakiyalakshmi Promo, Gopi, Radhika will find this news story useful.