"எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துனா.. ".. நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் மிரட்டும் TRAILER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள “O2” திரைப்படத்தின் டிரெய்லர் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

Nayanthara Starring O2 Movie Trailer Released

Also Read | அஜித் நடிக்கும் #AK61 படத்தில் இணைந்த பிரபல இளம் ஹீரோ! போடு வெடிய.. வைரலாகும் செம்ம மாஸ் போட்டோ

நயன்தாரா  நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம்  “O2”. பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

சிகிச்சைக்காக கொச்சி செல்லும் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.  எந்த ஒரு தாயும் தான் குழந்தைக்கு ஆபத்துனா பாத்துட்டு சும்மா இருக்க மாட்டா.. எனும் வசனத்துடன் டிரெய்லர் அமைந்துள்ளது.

Nayanthara Starring O2 Movie Trailer Released

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவின் 8 வயது பையனாக ரித்விக் நடித்துள்ளார். ரித்விக் ஏற்கெனவே யூடியூப்பில் பல வேடங்களில்  ஆண், பெண், வாலிபர், முதியவர், போலீஸ் என்று பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். 

Nayanthara Starring O2 Movie Trailer Released

இவருடைய காமெடி வீடியோக்களுக்கு செம்ம ரசிகர் பட்டாளம் உள்ளனர். போன தீபாவளிக்கு போத்திஸ் ஜவுளிக்கடையின் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றார். இவருடைய முக பாவனைகள், வசன உச்சரிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நாட்டாமை பாணியில் அமைந்த இந்த விளம்பரம் டிவிக்களில் சூப்பர் ஹிட் அடித்தது.

Nayanthara Starring O2 Movie Trailer Released

இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லனாக பிரபல த்ரில்லர் படமான K13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் நடித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

Nayanthara Starring O2 Movie Trailer Released

இப்படத்தின் டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | சுந்தர் சி இயக்கத்தில் 'உள்ளத்தை அள்ளித்தா' படம் போல கலகலப்பான காமெடி படம்.. ரிலீஸ் எப்போ?

"எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துனா.. ".. நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் மிரட்டும் TRAILER! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Starring O2 Movie Trailer Released

People looking for online information on Nayanthara, O2 Movie, O2 Movie Trailer Release will find this news story useful.