Sinam D Logo Top
www.garudabazaar.com

"கல்யாணம் கோபிக்கு, சமையல் காண்டராக்ட் பாக்கியாவுக்கு".. டாப் கியர் எடுக்கும் பாக்கியலட்சுமி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் பாக்கியலட்சுமி. இதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ள நிலையில், குடும்ப தலைவியாக வரும் பாக்கியா தான் இந்த தொடரின் நாயகி.

baakiyalakshmi new promo of baakiya cooking for gopi marriage

தன் குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்து வரும் பாக்கியா, தனது கணவர் கோபி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் மிக அன்பும் அரவணைப்பும் கொண்டு கவனித்து வந்தார்.

ஆனால், அவரது கணவரான கோபி, மனைவி பாக்கியாவை ஏமாற்றி விட்டு ராதிகா என்ற பெண்ணை அடையும் வழிகளில் ஈடுபட்டு வந்தார்.

பாக்கியா, ராதிகா என இருவரையும் பலே ஆளாக நாடகம் போட்டு கோபி நீண்ட காலம் ஏமாற்றி வந்தார். அந்த நாடகம் முடிவுக்கு வர, வசமாக சிக்கி கொண்டார் கோபி. இதன் பின்னர், பாக்கியலட்சுமி தொடரில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் அடுத்தடுத்து அரங்கேறி கொண்டிருக்கிறது. கோபிக்கு விவாகரத்து கிடைத்து விட்ட நிலையில், குடும்பத்தை பிரிந்து வந்த அவர், மீண்டும் ராதிகாவை திருமணம் செய்யும் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

baakiyalakshmi new promo of baakiya cooking for gopi marriage

மறுபக்கம், கடுமையாக உழைக்க முடிவு எடுத்துள்ள பாக்கியா, கல்யாண ஆர்டர் எடுத்து சமைக்க முடிவு செய்யும் நிலையில், ஒரு நேர்காணலில் கலந்து கொள்கிறார். மினி ஹாலில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் முதலில் சமைத்து காட்டுங்கள் என்றும் அதனை பார்த்து விட்டு, பெரிய திருமண ஆர்டர் தரலாம் என்றும் தொழிலதிபர் கூறுகிறார்.

baakiyalakshmi new promo of baakiya cooking for gopi marriage

இதன் பின்னர், அதே மண்டபத்தில் திருமணம் புக் செய்ய கோபி வருகை தர, அவரது திருமணத்திற்கான சமையல் ஆர்டர் பாக்கியாவுக்கு செல்கிறது. ஆனால், கோபியின் திருமணத்திற்கு தான் சமைக்க போகிறோம் என்பது தெரியாமலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி உற்சாகம் அடைகிறார் பாக்கியா. மறுபக்கம் என்ன நடக்க போகிறது என்பது தெரியாமலே, பாக்கியா குஷி ஆகும் நிலையில், அடுத்து என்ன நடக்க போகிறது என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

baakiyalakshmi new promo of baakiya cooking for gopi marriage

இதனிடையே, பாக்கியா மற்றும் கோபி ஆகியோர் இருக்கும் போஸ்டர் ஒன்று, கோவை நகர பகுதிகளில் ஒட்டப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

baakiyalakshmi new promo of baakiya cooking for gopi marriage

இந்த போஸ்டரில் ஒரு பக்கம் கோபி மற்றும் பாக்கியா ஆகியோர் இடம்பெற்றிருக்க, மறுபக்கம், "கோவை மக்களே..! கோபி செய்த தவறு என்ன?.. காத்திருங்கள்!!" என குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்து ட்விஸ்ட்களுடன் அரங்கேறி கொண்டிருக்கும் நிலையில், இந்த போஸ்டரில் உள்ள காரணம் என்ன என்பதும், இதன் பார்வையாளர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பி உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi new promo of baakiya cooking for gopi marriage

People looking for online information on Baakiya, Baakiyalakshmi, Gopi will find this news story useful.