Sinam D Logo Top
www.garudabazaar.com

சந்திரமுகி-2 படத்திற்காக களமிறங்கிய ராகவா லாரன்ஸ்.. புதிய தோற்றத்தில் வைரலாகும் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை குறித்தும் அடுத்து நடித்து வரும் சந்திரமுகி-2 படத்தின் அப்டேட் குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Raghava Lawrance New Look For Chandramukhi 2 Movie Viral Photos

Also Read | மாரி செல்வராஜின் 'மாமன்னன்'.. வைரலாகும் வடிவேலுவின் BTS போட்டோ..! சூப்பர் தகவல்

அந்த அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம், இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்.

இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என்னுடைய ( Larencce Charitable trust )  அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

Raghava Lawrance New Look For Chandramukhi 2 Movie Viral Photos

நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன். இப்போது, நான் நல்ல இடத்தில் இருக்கிறேன், மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி  வருகிறேன்,

இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, ( Larencce Charitable trust )  அறக்கட்டளைக்கு  உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று  கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனது ஆதரவாளர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன்!. அனைவருக்கும் என் இதயப்பூர்வமான  நன்றிகள். சேவையே கடவுள்.. அன்புடன் ராகவா லாரன்ஸ்." என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Raghava Lawrance New Look For Chandramukhi 2 Movie Viral Photos

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  'சந்திரமுகி 2'  திரைப்படத்தை தயாரிக்கிறார். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இப்படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் மேற்பார்வையில்  ‘சந்திரமுகி 2’ படம் உருவாகிறது.

கலை இயக்குநர் பணிகளை தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

Also Read | PONNIYIN SELVAN: கார்த்தி - த்ரிஷா - ஷோபிதா தோன்றும் "ராட்சஸ மாமனே".. புதிய காட்சிகளுடன் வெளியான LYRICAL VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrance New Look For Chandramukhi 2 Movie Viral Photos

People looking for online information on Chandramukhi 2 Movie, Raghava Lawrance New Look, Raghava Lawrence will find this news story useful.