The Legend
Maha others
www.garudabazaar.com

பிரபல ஹீரோவின் படத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. சும்மா பரவும் ஃபோட்டோஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமான சீரியல் பாக்கியலட்சுமி.

baakiyalakshmi suchitra acts in prabhudeva new movie

Also Read | அருள்நிதி நடிப்பில் வெளிவந்த புதிய த்ரில்லர் திரைப்படம்.. பிரபல OTT-யில் ரிலீஸா? எப்போ?

ஒரு இல்லத்தரசியின் கதை என்று சொல்லப்படும் இந்த சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கணவர் தன்னை ஏமாற்ற, வெகுளியாய் இருந்த பாக்கியலட்சுமி, அவருடைய இன்னொரு உறவு குறித்து தெரிந்ததும் எரிமலையாய் வெடித்திருக்கிறார்.

இது தொடர்பான எபிசோடுகள் இந்த சீரியலில் போய்க் கொண்டிருக்கிறது. இல்லத்தரசிகளின் வலிகளையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் பாக்கியலட்சுமி பலருடைய மனதிலும் குடி வந்து விட்டார். இப்படி சின்னத்திரை மூலமாக இப்படி ஏகோபித்த ரசிகர்களை சம்பாதித்த பாக்கியலட்சுமி சீரியல் நாயகியின் பெயர் சுசித்ரா.

baakiyalakshmi suchitra acts in prabhudeva new movie

தற்போது சுசித்ரா ஒரு திரைப்படத்தில் பிரபுதேவாவின் ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டு இருக்கிறார். ஆம் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் பிரபல கன்னட திரைப்படம் ஒன்றில்தான் சுசித்ரா நடிக்கிறார்.

baakiyalakshmi suchitra acts in prabhudeva new movie

இது தொடர்பான புகைப்படங்களைத்தான் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “அனைவருக்கும் வணக்கம்.. இது மிகச் சிறந்த நாள்.. நல்லுள்ளங்களுடன் பணி புரிகிறேன் என்பதில் மகிழ்ச்சி.. படக்குழுவினருக்கு நன்றி” என்று குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை சுசித்ரா பதிவேற்றி இருக்கிறார். இதை பார்த்த பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற சுசித்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. புது போஸ்டருடன் வெளியான 'வாத்தி' அப்டேட்!

Tags : Vijay tv

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi suchitra acts in prabhudeva new movie

People looking for online information on Vijay tv will find this news story useful.