Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

Baakiyalakshmi: "வெளிய போ.." - பெட்டியை தூக்கி வீசிய கோபி.. பாக்யா வெச்ச அனல் தெறிக்கும் ட்விஸ்ட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.

baakiya throws gopi out baakiyalakshmi serial new promo

இந்த சீரியலில் இதுவரை பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா ஆகிய இரு பெண்களை கோபி ஏமாற்றி வந்தார். ஆம், இவர்களுள் பாக்கியலட்சுமி கோபியின் மனைவி மற்றும் ராதிகா, கோபி காதலித்து வரும் பெண். கணவனை ஏற்கனவே பிரிந்த ராதிகா, தம்முடைய குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், அவரை பேசி மயக்கி தன் காதலை ஏற்க செய்து விட்டார் கோபி.

இதனிடையே தன் மனைவிக்கு தன் மீது விருப்பமில்லை என்றும், தன் மனைவி தன்னை விவாகரத்து செய்யும் மன நிலையில் இருக்கிறார் என்றும் கோபி பொய் சொல்லி ராதிகாவை ஏமாற்றி வந்தார். தற்போது, அனைவருக்கும் குட்டு வெளிப்பட்டு விட்டது. இதில் இருக்கும் முக்கியமான விஷயம் ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் நல்ல தோழிகள். இதனால் ராதிகா பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்யும்படி ஆகிவிட்டது என்கிற குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.

பாக்கியலட்சுமி.. வீட்டை விட்டு வெளியேறிவிட, அனைவரும் சோகத்தில் இருந்தனர். ஆனால் தன் மகன் எழிலுடன் மீண்டும் திரும்பி வீட்டுக்கு வந்த பாக்கியலட்சுமி, சில ஆடைகளை எடுத்து பெட்டி படுக்கையோடு வெளியே வர, கோபியொ, “என்னை மதிக்காமல்.. இந்த வீட்டை விட்டு சென்று விட்டு.. இந்த குடும்பம் வேண்டாம் என்று உதறிவிட்டு.. இப்போது எதற்கு இந்த வீட்டில் இன்னும் இருக்கிறாய்.. ?  வெளியே போ” என்று பெட்டியை பிடித்து தூக்கி வெளியே வீசுகிறார்.

ஆனால் பெட்டியில் இருந்ததுதான் ட்விஸ்ட்.. ஆம், பெட்டியில் இருந்த துணிகள் அனைத்தும் கோபி உடைய துணிகள். அப்போது பாக்யா, “ஆம்பளைங்க நீங்க என்ன வேணாலும் தப்பு செஞ்சுகிட்டே இருப்பீங்க.. நாங்க நடுரோட்டுல் நின்னு அழணுமா.? நான் ஏன் வெளியே போக வேண்டும்.. இது என்னுடைய வீடு.. நீங்க வெளியே போங்க” என்று அனல் பறக்க பேசுகிறார். இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

baakiya throws gopi out baakiyalakshmi serial new promo

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial episode today, Baakiyalakshmi today episode will find this news story useful.