Kaateri logo top
www.garudabazaar.com

Baakiyalakshmi:"பொண்டாட்டினா அண்டிப் பொழைக்கணுமா..?" - விவாகரத்துக்கு வழக்கில்.. பாக்யா ட்விஸ்ட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Baakiyalakshmi said okay for divorce with gopi

Also Read | "தயிர்சாதம் வாய்ல வெக்க முடியாது.. யூடியூப்க்கா சமைக்குறீங்க?" - அம்மாவை கேள்விகேட்ட சிறுமி 😂

இதில் மனைவி பாக்கியலட்சுமி மற்றும் தன் குடும்பத்தார் அனைவரின் நம்பிக்கைக்கும் துரோகம் செய்துவந்த கோபி, ராதிகா என்கிற திருமணமாகி பிரிந்த இன்னொரு பெண்ணை காதலித்து வந்தார். ஒரு வகையில் ராதிகாவுக்கும் கோபி துரோகம் தான் செய்துவந்தார்.

ஆனால் நல்ல தோழிகளான பாக்கியலட்சுமி & ராதிகா இருவரும் கோபி தங்கள் இருவருக்குமே துரோகம் செய்வது தெரியவந்து கோபப்பட்டனர். குறிப்பாக பாக்கியலட்சுமி தனக்கு துரோகம் செய்த கோபியை குடும்பத்தார் முன்னிலையில் வைத்து பல கேள்விகளை கேட்டுவிட்டு வெளியேறிவிட்டார். இதனிடையே கோபி, பாக்கியலட்சுமியை விவகாரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்ய எண்ணினார்.

Baakiyalakshmi said okay for divorce with gopi

அவர் போட்ட விவாகரத்து வழக்கு இப்போது விசாரணைக்கு வர, அதில் பெண் நீதிபதி முன் பேசும் பாக்கியலட்சுமி, எதிரில் நிற்கும் தன் கணவர் கோபியை பார்த்துக்கொண்டே, "என்னதான் புருஷன் பொண்டாட்டி உறவாக இருந்தாலும், ஒருவரை அண்டிப் பிழைப்பது என்பது மிகப்பெரிய அவமானம். இங்கு சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் இருக்கும் யாராக இருந்தாலும்,  உழைத்து பிழைப்பதற்கு அவர்களுக்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது." என்று கெத்தாக பதில் கூறுகிறார்.

Baakiyalakshmi said okay for divorce with gopi

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி, "நீங்கள் அனைத்தையும் யோசித்து தெளிவாகத்தான் இருக்கிறீர்கள்.. எனவே உங்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது" என்று அதிரடியாக தீர்ப்பளிப்பதாக இந்த ப்ரோமோ அமைந்திருக்கிறது.

Baakiyalakshmi said okay for divorce with gopi

இது உண்மையான நிகழ்வா? அல்லது எந்த கதாபாத்திமாவது கனவு காண்கிறதா? என்பது இன்னும் சரிவர தெரியவில்லை என்றாலும், பாக்கியலட்சுமி சீரியல் தற்போது அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாகவே ரசிகர்கள் ஆரவாரமிட்டு வருகின்றனர்.

Also Read | ‘இந்த மனுசனா இது?’.. லேடி கெட்டப்பில் அடையாளமே தெரில.. தெறிக்கும் BB Jodigal 2 புது ப்ரோமோ.!

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi said okay for divorce with gopi

People looking for online information on Baakiyalakshmi, Vijay tv will find this news story useful.