Sinam D Logo Top
www.garudabazaar.com

'நானே வருவேன்' படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போ? புதிய போஸ்டரில் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் டீஸர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Dhanush Naane Varuven Movie Teaser Release Update

Also Read | PONNIYIN SELVAN: கார்த்தி - த்ரிஷா - ஷோபிதா தோன்றும் "ராட்சஸ மாமனே".. புதிய காட்சிகளுடன் வெளியான LYRICAL VIDEO!

'நானே வருவேன்'  படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார். 

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் "வீரா சூரா" பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்த பாடலை இயக்குனர் செல்வராகவன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா & முத்து சிற்பி இணைந்து பாடினர்.

Dhanush Naane Varuven Movie Teaser Release Update

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Dhanush Naane Varuven Movie Teaser Release Update

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வரும் 15.09.2022 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக வடிவமைப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் இரு விதமான தோற்றத்தில் தனுஷ் தோன்றியுள்ளார்.

Dhanush Naane Varuven Movie Teaser Release Update

மேலும், படத்தயாரிப்பாளர் தாணு, "எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி "நானே வருவேன்" செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த டீஸர் வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்." என கலைப்புலி தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | சந்திரமுகி-2 படத்திற்காக களமிறங்கிய ராகவா லாரன்ஸ்.. புதிய தோற்றத்தில் வைரலாகும் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane Varuven Movie Teaser Release Update

People looking for online information on Dhanush, Naane Varuven, Naane Varuven Movie Teaser will find this news story useful.