www.garudabazaar.com

வெளிநாட்டில் செம லுக்கில் பாலகிருஷ்ணா & ஸ்ருதிஹாசன்! வைரலாகும் புதிய படத்தின் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு BTS புகைப்படம்  வெளியாகி உள்ளது.

Gopichand Malineni with Balakrishna and Shruti Haasan in Turkey Istanbul

Also Read | 'நட்சத்திரம் நகர்கிறது' படம் பார்த்த அனுராக் காஷ்யப்.. படம் பற்றி அவரே இட்ட வைரல் பதிவு!

தற்போது 'NBK 107' என்ற புதிய படத்தை இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்க பாலகிருஷ்ணா நடிக்கிறார்.  இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாகவுள்ளது.

'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும். ஸ்ருதி ஹாசன் போக வரலெட்சுமி சரத்குமாரும் இந்த படத்தில் நடிக்கிறார்.

Gopichand Malineni with Balakrishna and Shruti Haasan in Turkey Istanbul

போயபதி சீனு இயக்கத்தில் வெளியான 'அகண்டா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் பாலகிருஷ்ணா தற்போது நடிக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கன்னட நடிகர் துனியா விஜய் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

எஸ் தமன் இசையமைப்பு செய்ய, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்கிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பைக் கவனிக்கிறார் மற்றும் ஏஎஸ் பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். ராம்-லக்ஷ்மண்  சண்டை இயக்குனராகவும், இப்படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராக சந்து ரவிபதி பணியாற்றுகின்றனர்.

Gopichand Malineni with Balakrishna and Shruti Haasan in Turkey Istanbul

இந்நிலையில் இந்த படத்தின் முக்கியமான படப்பிடிப்பு துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் துவங்கி உள்ளது. இது தொடர்பான செல்ஃபி புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் இயக்குனர் கோபிசந்த் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் செம ஸ்டைலிஷ் லுக்கில் பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசனும் உள்ளார்.  இந்த படப்பிடிப்பில் ஆக்சன் மற்றும் வசன காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.

Gopichand Malineni with Balakrishna and Shruti Haasan in Turkey Istanbul

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதனை சில நாட்களுக்கு முன் சிரஞ்சீவி டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | COBRA-க்கு சொந்த குரலில் டப்பிங் பேசினாரா இர்பான் பதான்? அவரே சொன்ன EXCLUSIVE தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Gopichand Malineni with Balakrishna and Shruti Haasan in Turkey Istanbul

People looking for online information on Balakrishna, Gopichand Malineni, Istanbul, Nandamuri Balakrishna, Shruti Haasan will find this news story useful.