www.garudabazaar.com

Baakiyalakshmi: "ராதிகாவும் நல்லவங்க தான்.. கோபி ஏமாத்துறாருல.?" - ரசிகருக்கு ரேஷ்மா பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் வெற்றி பெற்றார் ராஜூ. டைட்டில் வின்னரான ராஜூ, பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வருகிறார்.

Baakiyalakshmi Radhika role Reshma Opens up

Also Read | செஸ் ஒலிம்பியாடுக்காக சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ!

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியான ராஜூ வூட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சி கலகலப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ராஜூ, பிரியங்கா தொகுத்து வழங்க, இந்த வார சிறப்பு விருந்தினராக, ஈரமான ரோஜாவே கேப்ரியல்லா, பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா புகழ் ரேஷ்மா மற்றும் பிக்பாஸ் ஜூலி அமர்ந்துள்ளனர்.

இதில் பேசிய ராஜூ, அங்கு அமர்ந்திருந்த ரேஷ்மாவிடம், நேயர் கேள்வியாக, “பாக்கியலட்சுமி சீரியலில் வரும் ராதிகாவும் ஒரு வகையில் நல்லவர் தானே...?" என்று கேட்கிறார்.

Baakiyalakshmi Radhika role Reshma Opens up

அப்போது சிரித்தபடி, ரேஷ்மா, “ஆமாம்.. பாக்கியலட்சுமியை போல் ராதிகாவும் நல்லவங்க தான்.. ஏனென்றால் கோபி பாக்கியலட்சுமியை போல் ராதிகாவையும் ஏமாற்றவே செய்கிறார்... ஆனாலும் ராதிகா மீது மக்கள் வைக்கும் விமர்சனம் அந்த கதாபாத்திரத்துக்கானது. அது நெகடிவாக இருந்தாலும் நாங்கள் பாசிடிவாகவே எடுத்துக்கொள்வோம்"     என சொல்கிறார்.

இப்படி கலகலப்பாக போகும் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி, ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Baakiyalakshmi Radhika role Reshma Opens up

பல நாட்களாக பாக்கியலட்சுமிக்கு துரோகம் பண்ணிக் கொண்டு வந்திருந்த கோபி, ராதிகா என்கிற இன்னொரு பெண்ணை திருமணம் செய்யும் வரையில் சென்று விட்டார். ஆனால் பாக்கியலட்சுமியும் ராதிகாவும் ஒருவருக்கொருவர் நல்ல தோழிகள் என்கிற விஷயம் அவர்கள் இருவருக்குமே தற்போது தெரிய வந்தது.

Baakiyalakshmi Radhika role Reshma Opens up

அத்துடன் பாக்கியலட்சுமிக்கு  தன் கணவர் கோபி, ராதிகாவுடன் உறவு வைத்திருக்கிறார் என்பது தெரிய வந்தது விட்டது. இதைத் தொடர்ந்து வீட்டில் அனைவரும் முன்னிலையிலும் வைத்து கோபியை விசாரித்த பாக்கியலட்சுமி, கோபமாக வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்.

இந்த சீரியல் வார நாட்களில் இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Also Read | Breaking: சிவகார்த்திகேயனின் "மாவீரன்" படத்தில் கைகோர்க்கும் நடிகை இவரா.?

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Radhika role Reshma Opens up

People looking for online information on Baakiyalakshmi, Bigg Boss Raju, Raju Vootla Party, Reshma Pasupuleti, Vijay Television will find this news story useful.