VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

நடிகை மீனா பிறந்தநாள்.. Throwback Picture-ஐ பகிர்ந்து 'அக்காவை' வாழ்த்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மீனா பிறந்தநாளுக்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.

Ashwarya Rajinikanth birthday wishes to actress meena

90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மீனா நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாகவும் & கதாநாயகியாகவும்  ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என முன்னணி நடிகர்களுடன் ஒரு காட்சியிலாவது இணைந்து மீனா நடித்திருக்கிறார்.

தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

இன்று  தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி நடிகை மீனா கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பகிர்ந்துள்ளார்.இந்நிலையில் நடிகை மீனாவுக்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனாவுடன் இருக்கும் பழைய Throwback புகைப்படத்தை பகிர்ந்து "பிறந்தநாள் வாழ்த்துகள் மீனா அக்கா" என்று கூறியுள்ளார்.

Ashwarya Rajinikanth birthday wishes to actress meena

ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து  '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது லைகா நிறுவனத்துக்காக புதிய படமும், அது போக இந்தியில் ஒரு படத்தையும் இயக்க உள்ளார்.  இவர் இயக்கிய 'சினிமா வீரன்' என்ற ஆவண படமும், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பயணி மியுசிக் வீடியோவும் சமீபத்தில் வெளியானது.

தொடர்புடைய இணைப்புகள்

Ashwarya Rajinikanth birthday wishes to actress meena

People looking for online information on Aishwarya Rajinikanth, Meena will find this news story useful.