Yaanai

"இன்னும் 14 நாள் தான் இருக்கு.." மீனாவின் பழைய இன்ஸ்டா நினைவை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 1990-களின் போது தமிழ் சினிமாவின் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை மீனா.

meena husband passed away their wedding anniversary in 14 days

Also Read | சிம்பு மற்றும் மனைவியோடு T ராஜேந்தர்… இலண்டனில் இருந்து வெளியான சமீபத்தைய புகைப்படம்

அடுத்தடுத்து பல வெற்றி படங்களின் காரணமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, தென் இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் மீனா திகழ்ந்து வந்தார்.

தற்போது வரை, தொடர்ந்து பல திரைப்படங்கள் மற்றும் சீரியல் உள்ளிட்டவற்றுள் நடித்து வரும் நடிகை மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

meena husband passed away their wedding anniversary in 14 days

இந்த தம்பதியருக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு, விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த 'தெறி' என்னும் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அவரின் அசத்தலான நடிப்பால், பலரின் ஃபேவரைட் குழந்தை நட்சத்திரம் ஆகவும் மாறி இருந்தார்.

நுரையீரல் பிரச்சனை?

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம், மீனா, கணவர் வித்யாசாகர் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றில் இருந்து அனைவரும் மீண்டு வந்தாலும், கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை உருவாகியுள்ளது. அதே போல, புறாவின் எச்சத்தை சுவாசிப்பதால் உடலில் பரவும் ஒரு வித கிருமி பாதிப்பு காரணமாக நுரையீரல் பிரச்சனை உருவாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

meena husband passed away their wedding anniversary in 14 days

வேதனையில் பிரபலங்கள், ரசிகர்கள்

மேலும், நெஞ்சு வலியும் வித்யாசாகருக்கு ஏற்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (28.06.2022) மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். 48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு, மீனாவின் ரசிகர்களையும் திரையுலகைச் சார்ந்த பலரையும் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக, பல பிரபலங்கள் நேரடியாகவும், சமூக வலைத்தளம் வாயிலாகவும் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் 14 நாள் தான் இருக்கு..

இந்நிலையில், தற்போது மற்றும் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி, மீனாவின் ரசிகர்களை இன்னும் மனமுடைந்து போகச் செய்துள்ளது. மீனா மற்றும் வித்யாசாகர், கடந்த 2009 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இன்னும் 14 நாட்களில், தங்களின் 13 வது ஆண்டு திருமண நாளை மீனா மற்றும் வித்யாசாகர் ஆகியோர் கொண்டாட இருந்த நிலையில், கணவர் வித்யாசாகர் மரணமடைந்த சம்பவம், பலரையும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.

meena husband passed away their wedding anniversary in 14 days

அது மட்டுமில்லாமல், கடந்த ஆண்டு திருமண நாளின் போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பகிர்ந்த புகைப்படமும், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Also Read | நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்.. வெளியான காரணம்..சோகத்தில் குடும்பத்தினர்

தொடர்புடைய இணைப்புகள்

meena husband passed away their wedding anniversary in 14 days

People looking for online information on Meena, Meena husband passed away will find this news story useful.