VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

செல்வராகவன் நடிக்கும் பகாசூரன்.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன்.

Bakasuran Movie Tamilnadu Theatrical Rights Bagged by SSI Production

Also Read | பிரபல ஸ்டார் ஹோட்டலில் ராஷ்மிகா மந்தனா.. 16 வகை உணவுகளுடன் வேறலெவல் விருந்து!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

Bakasuran Movie Tamilnadu Theatrical Rights Bagged by SSI Production

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமா வரை தமக்கென தனியிடத்தை தக்கவைத்து பல சூப்பர் ஹிட்  படங்களை கொடுத்துவரும் சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்தின் மூலம் இயக்குனர் மோகன் G யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

Bakasuran Movie Tamilnadu Theatrical Rights Bagged by SSI Production

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 18 ம் தேதி சேலம் முத்துமலை  முருகன் கோவிலில் பூஜையுடன் துவங்கியது. கடந்த ஜூலை 18 ஆம் தேதியயோடு முழு படப்பிடிப்பும்  முடிவடைந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் & இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் டீஸரும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

Bakasuran Movie Tamilnadu Theatrical Rights Bagged by SSI Production

இந்த படத்தை நவம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார். இவர் ஏற்கனவே மாநாடு படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | த்ரிஷா & ஷோபிதா அசத்தல் நடனம்.. பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த LYRIC VIDEO!

தொடர்புடைய இணைப்புகள்

Bakasuran Movie Tamilnadu Theatrical Rights Bagged by SSI Production

People looking for online information on Bakasuran movie, Bakasuran Movie Updates, Natty Natraj, Selvaraghavan will find this news story useful.