"மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டாங்க" திடீர்னு வந்து நின்ன தோழி.. இன்ப அதிர்ச்சியில் கலா மாஸ்டர்
முகப்பு > சினிமா செய்திகள்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.
தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு, வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், இந்த தம்பதியருக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். குடும்பமாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், கடும் துயரம் ஒன்று அவர்களை சூழ்ந்து கொண்டது.
கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று, மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. கணவரின் மறைவால், கடுமையாக மனமுடைந்து போன மீனா, அவரது நினைவால் சில மனம் உருகும் பதிவுகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் பின்னர், கணவர் உயிரிழந்து ஒரு மாதங்கள் கழித்து நடிகைகள் மற்றும் தோழிகளான ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோர், குடும்பமாக வந்து மீனாவை சந்தித்திருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதே போல உடல் உறுப்பு தானம் தொடர்பாகவும் சமீபத்தில் இன்ஸ்டா பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டரின் திருமண நாளை முன்னிட்டு நடிகை மீனா கொடுத்த சர்ப்ரைஸ் தொடர்பான விஷயம், ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. இது தொடர்பாக கலா மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதன் படி, கலா மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீனா மற்றும் தனது குடும்பத்தினருடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதே போல, மீனா சர்ப்ரைஸாக வந்தது பற்றி குறிப்பிட்டிருந்த காலா மாஸ்டர், தனது கேப்ஷனில், "நேற்று மீனா என்னிடம் ஊரில் இல்லை என பொய் செய்திருந்தார். இதனால், என்னுடைய திருமண நாளன்று அவர் இல்லை என்பதால் நான் சற்று வருத்தம் அடைந்தேன். ஆனால், திடீரென வந்து என்னை அவர் ஆச்சரியப்படுத்தினார். லவ் யூ மீனா" என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் மறைந்த சமயத்தில், முழுக்க முழுக்க கலா மாஸ்டர் தான் மீனா அருகே இருந்து அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டார். அப்படி தனது துயரின் போது உடனிருந்து தன்னை பார்த்துக் கொண்ட கலா மாஸ்டருக்கு வேற லெவலில் இன்ப அதிர்ச்சி கொடுத்தது தொடர்பான விஷயம், பலரையும் நெகிழ வைத்துள்ளது.
மேலும், இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actress Meena Latest Statement About Organ Donation
- Actress Meena Meets Other Actress Shares Photos
- Karthi Visiting Madurai Meenakshi Amman Temple
- Kala Master Tweets About Her Son Scores A Grade In Icse Syllabus
- Meena Instagram Post With Her Husband Photo Makes Emotional
- Actress Meena Emotional Insta Post After Her Husband Demise
- Actress Khushbu Sundar Clarifies Meena Husband Vidyasagar Dead
- Actress Meena Husband Passed Away Area People Broke Down
- Rajinikanth Attend Meena Husband Vidhyasagar Funeral
- Meena Husband Passed Away Their Wedding Anniversary In 14 Days
- Actress Meena Husband Passed Away Due To Illness
- Actress Meena Join Hands With Her First Hero After 32 Yrs
தொடர்புடைய இணைப்புகள்
- Meena-യുടെ കുട്ടികാലം മുതൽ ദേ ഇപ്പോൾ വരെ 😍🤩
- Sneha 😍 Prasanna வீட்டுல விசேஷம் 🥳 மங்களரமா வந்த Rambha, Saranya Ponvannan, Pritha Hari 🥰
- Meena -യുടെ കിടിലൻ Transformation Video 😍🥰❤️
- Drishyam -വും Memories -ഉം മമ്മൂക്ക ഉപേക്ഷിക്കാനുള്ള കാരണം ഇതാണ്....😳😱| Jeethu Joseph Reveals
- இறந்த கணவரை நினைத்து உருகிய மீனா..துணிந்து எடுத்த உருக்கமான முடிவு : சோகத்தில் ரசிகர்கள்
- "அது மட்டும் நடந்திருந்தா, என்னோட கணவர் உயிரோட இருந்திருப்பாரு" 🥺 Meena Emotional
- PRABHU DEVA கொடுத்த PARTY-ல் MEENA, RAMBHA, KHUSHBU 😍🥳 90'S REUNION
- ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் கொஞ்சம் சிரிக்குறேன் 😍 மீண்டு வரும் Meena ❤️ Sangeetha, Sangavi, Rambha
- Will You Marry A DIVORCEE? Ladies Opinion Video
- "வேதனைய தாங்க முடியல"... Meena கணவர் மறைவால் உடைந்து போன Vijayakanth 🥺
- ''கணவரோடு' நிற்கும் மீனா'.. உச்சபட்ச சோகத்தில் உடைந்து நிற்கும் காட்சி🥺 நெஞ்சை உலுக்கிய VIDEO
- "இந்த கஷ்டமான நேரத்துல தப்பா பரப்புறத நிறுத்துங்க " 🥺 கணவர் இறந்த வேதனையில் பேசிய Meena