VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை மீனா.. வைரலாகும் சூப்பர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா.

Meena Celebrated Her Birthday Cake Cutting Video

Also Read | கேங்ஸ்டர் 'வேதா' லுக் இப்படி தான் உருவாச்சு.. இந்தி விக்ரம் வேதாவின் மிரட்டலான BTS வீடியோ

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மீனா நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாகவும் & கதாநாயகியாகவும்  ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என முன்னணி நடிகர்களுடன் ஒரு காட்சியிலாவது இணைந்து மீனா நடித்திருக்கிறார்.

Meena Celebrated Her Birthday Cake Cutting Video

தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். கடந்த 2009ஆம் ஆண்டு கணினி பொறியாளார் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா.

Meena Celebrated Her Birthday Cake Cutting Video

கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று, மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. கணவரின் மறைவால், மனமுடைந்து போன மீனா, அவரது நினைவால் சில மனம் உருகும் பதிவுகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

கணவர் மறைந்து சுமார் 2 மாதங்களுக்கு மேலான நிலையில், தற்போது மெல்ல மெல்ல அதிலிருந்து நடிகை மீனா மீண்டு வருவதாக தெரிகிறது. அதன்படி, சமீபத்தில் தனது நெருங்கிய தோழிகளும், பிரபல நடிகைகளுமான சங்கவி, சங்கீதா மற்றும் ரம்பா ஆகியோர், குடும்பமாக வந்து நடிகை மீனா மற்றும் அவரது மகள் நைனிகா ஆகியோரை சந்தித்தனர்.

Meena Celebrated Her Birthday Cake Cutting Video

இந்நிலையில் தொழிலதிபர் ரேணுகா பிரவீன் & கீது நாயுடு ஆகியோருடன் தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி நடிகை மீனா கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பகிர்ந்துள்ளார்.

Also Read | பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "வணங்கான்‌ பட செட்டில்‌‌".. மனம் திறந்த கீர்த்தி ஷெட்டி!

தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை மீனா.. வைரலாகும் சூப்பர் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Meena Celebrated Her Birthday Cake Cutting Video

People looking for online information on Meena, Meena Celebrate Her Birthday will find this news story useful.