Yaanai

நடிகை மீனா கணவரின் இறுதி சடங்கு.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மீனா கணவரின் இறுதி சடங்கு நிகழ்வில் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

Rajinikanth attend Meena Husband vidhyasagar funeral

Also Read | “எளிமை…. Inspiration…” பில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகர் மகேஷ் பாபு…. வைரல் Tweet

கடந்த 2009ஆம் ஆண்டு கணினி பொறியாளார் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா.

கொரோனா தாக்கத்தால் ஏற்கனவே ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில்  மினாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (28.06.2022) சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் உடன் வீரா, எஜமான், முத்து படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்த் உடன் மீனா நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Rajinikanth attend Meena Husband vidhyasagar funeral

நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் வித்யாசாகரின் உடல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது பூத உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், மன்சூர் அலிகான், சினேகா, கலா மாஸ்டர், சுந்தர் சி, குஷ்பு அஞ்சலி செலுத்தினர். இந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன

Also Read | ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தில் அசத்திய நடிகர் மரணம்.. அதிர்ச்சியை ஏற்படுத்தும் பரபரப்பு பின்னணி

நடிகை மீனா கணவரின் இறுதி சடங்கு.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth attend Meena Husband vidhyasagar funeral

People looking for online information on Meena, Meena husband passed away, Rajinikanth attend Meena Husband funeral, Vidhyasagar funeral will find this news story useful.