முரட்டு மீசை… தெறி லுக்… அருள்நிதியின் அடுத்த படம் பற்றி வெளியான தகவல்… Viral pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருள்நிதி நடிக்கும் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Arulnidhi latest getup went viral in Internet

அருள்நிதியின் அடுத்தடுத்த ரிலீஸ்…

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவான வம்சம் மற்றும் மௌனகுரு ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்று அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. இந்நிலையில் தற்போது அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்குக் காத்திருகின்றன. அருள்நிதி நடிப்பில் டைரி படத்தின் முதல் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி கவனத்தைப் பெற்றன.இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Arulnidhi latest getup went viral in Internet

தேஜாவு & டி ப்ளாக்…

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் 'தேஜாவு'. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி மற்றும் காளி வெங்கட் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான D ப்ளாக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்த படத்தை விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். திரில்லர் படமாக டி ப்ளாக் திரைப்படம் உருவாகியுள்ளது.

Arulnidhi latest getup went viral in Internet

அருள்நிதியின் அடுத்த படம்…

இந்நிலையில் அருள்நிதியின் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ராட்சசி படத்தின் இயக்குனர் கௌதம்ராஜ் இயக்கத்தில் ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு இமான் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அருள்நிதி வித்தியாசமான கெட் அப்போடு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Arulnidhi latest getup went viral in Internet

People looking for online information on Imman, Olympia Movies, Sridhar will find this news story useful.