“உள்குத்தும் இருக்கு… Open குத்தும் இருக்கு…” BB ஜோடிகள் அரங்கை தெறிக்கவிட்ட கமலின் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல் கலந்துகொண்ட பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ரசிகர்களால் அதிகளவில் விரும்பப்பட்டு பார்க்கப்படுகிறது.

Kamal comment on vikram dialogue in BB Jodigal

Also Read | “நேர்ல பாத்தாங்க கட்டிப்பிடிச்சாங்க… முடிஞ்சு போச்சு”… இளையராஜா & SPB நட்பு… சரண் நெகிழ்ச்சி

விக்ரம் வரவேற்பு…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரிலீஸூக்கு முன்பே வைரல் ஹிட் ஆகின. அதுபோல மிரட்டலான தீம் இசையும் கவனம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Kamal comment on vikram dialogue in BB Jodigal

குவியும் பாராட்டு…

குறிப்பாக கமல், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் கதாபாத்திரங்கள் வெகுஜன ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து நடிகர் கமல்ஹாசன் “என் வாழ்நாளில் இப்படி ஒரு வரவேற்பைப் பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகைச் சேர்ந்த பலரும் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்குத்து ஓப்பன் குத்து…

இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்ட ஸ்பெஷல் எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்ச்சியின் வீடியோ துணுக்கு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் தொகுப்பாளர் கமலிடம் “சார் விக்ரம் படத்துல வர்ற வசனமான ‘பாத்துக்கலாம்’ போல உங்க வாழ்க்கைல நெனச்ச விஷயம் என்ன சார் “என்று கேட்டார்.

Kamal comment on vikram dialogue in BB Jodigal

அந்த கேள்விக்கு தன் பாணியில் கமல் “பாத்துகிட்டே இருக்கேன். நெறய விஷயங்கள் அப்படிதான் இறங்க வேண்டி இருக்கு. நீங்களும் பாத்துகிட்டே இருக்கீங்க. சில பேருக்கு ஞாபகம் இருக்கும். சிலருக்கு ஞாபகம் இருக்காது. பாத்துக்கலாம். அவங்களுக்கும் ஞாபகம் வரும்” என்று கூறினார். இந்த பதிலைக் கேட்டு அருகில் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் “இது ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு” என்று கூற, அதற்குக் கமல் உடனடியாக “அய்யோ கண்டிப்பா இருக்கு… உள்குத்தும் இருக்கும். Open குத்தும் இருக்கு” என்று கூற ரசிகர்கள் கைதட்டி ஆரவாரமாக அந்த பதிலை ரசித்தனர்.

Also Read | அரவிந்த் சாமி & ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’… VJS வெளியிட்ட மிரட்டலான டீசர்…

தொடர்புடைய இணைப்புகள்

Kamal comment on vikram dialogue in BB Jodigal

People looking for online information on BB Jodigal, Kamal Haasan, Vijay Television, Vikram Movie will find this news story useful.