www.garudabazaar.com

Annaatthe TRP: அதிரடி சரவெடி!.. சம்பவம் செய்த ரஜினிகாந்த் - சிறுத்தை சிவா-வின் அண்ணாத்த!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Annaththe TRP: சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு ஒளிபரப்பான படங்களில் அதிக அதிக டிஆர்பி ரேட்டிங்கை அள்ளியுள்ளது.

rajinikanth annatthe top in trp imman viral post அண்ணாத்த

ரஜினிகாந்த் அண்ணாத்த

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் மற்றும் பலரது நடிப்பில் கடந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது.

அதிக டிஆர்பி ரேட்டிங்

ஆம், கடந்த 2021ம் ஆண்டு வெளியான படங்களிலேயே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது ரஜினிகாந்த் நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படம். திரையரங்குகளில் குடும்பங்களுடன் சென்று அனைவரும் பார்க்கும் வகையில், ஆக்‌ஷன், அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் என குடும்ப பொழுதுபோக்கு படமாக அண்ணாத்த படம் அனைவரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பொங்கல் ப்ரீமியர்

பின்னர் கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரீமியராக அண்ணாத்த திரைப்படம் சன் டிவியிலும், சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் தான் அண்ணாத்த திரைப்படம் டிஆர்பியில் மரண மாஸ் காட்டியுள்ளது.

17.37 மில்லியன் பார்வைகள்

இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப் படங்களிலேயே அதிக டிஆர்பி ரேட்டிங்கை அண்ணாத்த திரைப்படம் பெற்றுள்ளது. அதாவது அண்ணாத்த படம் சுமார் 17.37 மில்லியன் பார்வைகளை கடந்து ஒளிபரப்பாகியுள்ளது. இன்னொரு விதமாய் சொல்ல வேண்டுமானால், 1.7 கோடி பேர் அண்ணாத்த திரைப்படத்தை அன்றைய நாளில் பார்த்திருக்கின்றனர்.

 

இந்த தகவலை இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.

Also Read: வெறித்தனம்.. Title-னாலே இந்த மனுசன் தான்! தமிழ்ப்படம் இயக்குநருடன் விஜய் ஆண்டனி இணையும் அடுத்த படத்துக்கு பேரு  இதுவா?

தொடர்புடைய இணைப்புகள்

rajinikanth annatthe top in trp imman viral post அண்ணாத்த

People looking for online information on Annaatthe, D Imman, Rajinikanth, Siruthai Siva, Sun pictures will find this news story useful.