திருமண மேடையில் மறைந்த அம்மாவின் உருவத்துடன் இமான்… நெகிழ்ச்சி பதிவு… வைரலாகும் PIC

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இமான் தன்னுடைய மறுமணப் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவை கவனத்தைப் பெற்றுள்ளன.

D Imman viral pic with his demised mother in marriage

Also Read | பிரபு சாலமனோடு இணைந்த CWC அஸ்வின்… Title & ஃபர்ஸ்ட் லுக் எப்போ? லேட்டஸ்ட் தகவல்!

இமானின் திரைப்பயணம்…

2022 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் தமிழன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் இமான். அந்த படத்தின் போது அவரின் வயது 18. மிகக்குறைந்த வயதில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரான அவர் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வந்தார். தனது இசைப்பயணத்தில் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த் என பல முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2019 ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய அளவில் மிக உயர்ந்த சினிமா விருதான தேசிய விருதை விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் இமான் பெற்றிருந்தார்.

D Imman viral pic with his demised mother in marriage

விவாகரத்தும் மறுமணமும்…

சில மாதங்களுக்கு முன்னர் டி. இமான் தனது மனைவி மோனிகாவை முன் விவாகரத்து செய்தார். இந்த விவாகரத்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் அமலி என்பவரை மறுமணம் செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமானப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதையடுத்து தற்போது முதல் முறையாக தனது மறுமணம் குறித்து இமான் ஒரு நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

D Imman viral pic with his demised mother in marriage

அம்மாவோடு இமான்…

அந்த பதிவில் “மே 15, 2022 அன்று ஞாயிற்றுக்கிழமை அமலி உபால்டுடன் நடந்த (மறைந்த திரு. உபால்ட்-பப்ளிசிட்டி டிசைனர் மற்றும் திருமதி. சந்திரா உபால்டின் மகள்) எனது மறுமணச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கடினமான காலங்களில் வலுவான தூணாக இருந்ததற்காக எனது தந்தை டேவிட் கிருபாகராவுக்கு நன்றி. இந்த திருமணம் ஒரு பெரிய மருந்து. கடந்த சில வருடங்களாக எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட அனைத்து வாழ்க்கை சவால்களுக்கும் மகிழ்ச்சியின் ஆரம்பம். மறைந்த எனது தாயார் திருமதி மஞ்சுளா டேவிட்டின் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கும். எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

D Imman viral pic with his demised mother in marriage

அமலியின் அன்பு மகள் நேத்ரா இனிமேல் எனக்கு மூன்றாவது மகள்! மேலும் நேத்ராவின் தந்தையாக இருப்பது மகிழ்ச்சியையும் அற்புதமான உணர்வையும் தருகிறது! எங்கள் திருமண நாளில் என் அன்பான மகள்களான வெரோனிகா மற்றும் பிளஸ்சிகாவை நான் தனிப்பட்ட முறையில் மிஸ் செய்தாலும் அவர்களின் அன்பு எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். மிகுந்த அன்புடன் நாங்கள் அன்பான மகள்கள் வீட்டிற்கு வருவதற்கு பொறுமையாக காத்திருப்போம். நானும், அமலி, நேத்ரா மற்றும் எங்கள் உறவினர்கள் அனைவரும் வெரோனிகா மற்றும் பிளஸ்சிகாவிடம் இருந்து டன் கணக்கில் அன்புடன் பெறுவோம்!. பிரியமான அமலியின் பெரிய குடும்பத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த பதிவோடு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மறைந்த அவரின் தாயாரின் உருவ ‘கட் அவுட்’ ஒன்றையும் வைத்து குடும்பப் புகைப்படமாக எடுத்துள்ளார். இதுபோல அமலியின் தந்தை உருவமும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

D Imman viral pic with his demised mother in marriage

People looking for online information on இமான், D Imman, D Imman Latest picture will find this news story useful.