அரவிந்த் சாமி & ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’… VJS வெளியிட்ட மிரட்டலான டீசர்…

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ராஜபாண்டி இயக்கியுள்ள கள்ளபார்ட் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Actor Vijay sethupathi released kallapart teaser

Also Read | “நேர்ல பாத்தாங்க கட்டிப்பிடிச்சாங்க… முடிஞ்சு போச்சு”… இளையராஜா & SPB நட்பு… சரண் நெகிழ்ச்சி

90 களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர் அரவிந்த் சாமி ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி தொழிலதிபராக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அடுத்தடுத்து தனி ஒருவன், போகன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கள்ளபார்ட்…

அரவிந்த்சாமி மற்றும் ரெஜினா நடித்துள்ள " கள்ளபார்ட் " படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்ற, இசையமைப்பாளராக நிவாஸ் K பிரசன்னாவும், எடிட்டராக S. இளையராஜாவும், கலை இயக்குனராக- மாயா பாண்டியும், ஸ்டண்ட் இயக்குனராக மிராக்கில் மைக்கேல்லும் பணியாற்றுகின்றனர். பாடல்களை கங்கை அமரன், சரஸ்வதி மேனன் ஆகியோர் எழுதி உள்ளனர்.  S.பார்த்தி, S.சீனா தயாரித்துள்ளனர்.

Actor Vijay sethupathi released kallapart teaser

ரிலீஸ்…

இந்த திரைப்படம் கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது ரிலீஸ் தேதி ஜூன் 24  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு UA சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமான புதிய போஸ்டரைப் படக்குழ் வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Vijay sethupathi released kallapart teaser

டீசர்

இந்நிலையில் தற்போது கள்ளபார்ட் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி டீசரை வெளியிட்டுள்ளார். டீசரில் அரவிந்த் சாமியில் சக்கர நாற்காலியில் வாழும் மாற்றுத்திறனாளியாக தோன்றுகிறார். அவர் வீட்டுக்கு வரும் ரெஜினா மற்றும் அவரை சேர்ந்தவர்களால் ஏற்படும் பிரச்சனைகளை அரவிந்த் சாமி தன்னுடைய அறிவால் எப்படி சமாளிக்கிறார் என்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. மிரட்டலாக வெளியாகி இருக்கும் இந்த டீசருக்கு நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

Actor Vijay sethupathi released kallapart teaser

Also Read | அரசியல்வாதி கெட்-அப்பில் பகத்… சர்ப்ரைஸ் விசிட் அடித்த பிரபல இயக்குனர்- மாமன்னன் BTS pics

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay sethupathi released kallapart teaser

People looking for online information on Kallapart Movie, Kallapart teaser, Vijay Sethupathi will find this news story useful.