“நேர்ல பாத்தாங்க கட்டிப்பிடிச்சாங்க… முடிஞ்சு போச்சு”… இளையராஜா & SPB நட்பு… சரண் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா சாதனையாளர்களான இளையராஜா எஸ் பி பாலசுப்ரமணியம் நட்பு பற்றி எஸ் பி பி சரண் பேசியுள்ளார்.

Charan talked emotionally SPB Ilaiyaraaja friendship

Also Read | அரசியல்வாதி கெட்-அப்பில் பகத்… சர்ப்ரைஸ் விசிட் அடித்த பிரபல இயக்குனர்- மாமன்னன் BTS pics

எஸ் பி பி மரணம்…

பல இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகில், குறிப்பாக இசையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல முன்னணிக் கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மீளாத்துயர்…

அவரது மறைவை ஒட்டி பலரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்தும், அவருடைய பாடல்கள் குறித்தும், அவருடனான நினைவுகள் குறித்துமான நினைவலைகளை அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா, இசைக்கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நினைவலைகள் நிகழ்வில் பேசும்போது, ”மருத்துவமனையில் கிரிட்டிகலான சூழலில் இருந்த போது, யாரையாவது பார்க்க விரும்புகிறீர்களா? என்று கடைசியாக கேட்டதற்கு ராஜா இருந்தால் வரச்சொல்லுங்கள் என்று  கூறினாராம்.” என்று பேசியது ரசிகர்களை நெகிழச் செய்தது.

Charan talked emotionally SPB Ilaiyaraaja friendship

இந்நிலையில் ஜூன் 4 ஆம் தேதி SPB-ன் 75 ஆவது பிறந்தநாளை ஒட்டி, ”அன்புள்ள அப்பா” என்ற  என்ற பெயரில் கச்சேரி ஒன்றை SPB சரண் நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சரண் நெகிழ்ச்சி…

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு முன்பாக பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு சரண் அளித்துள்ள பிரத்யேகமான நேர்காணலில் எஸ்பிபி மற்றும் இளையராஜா ஆகியோருக்கு இடையே உள்ள நட்பைப் பற்றி பேசியது உணர்ச்சிப்பூர்வமாக அமைந்துள்ளது. அதில் “அப்பாவும் இளையராஜா சாரும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். அப்பா இளையராஜாவுக்கு முன்பே பல பாடல்களைப் பாடி இருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்தது இளையராஜாவோடு இணைந்த பிறகுதான். இதை அவரே பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

Charan talked emotionally SPB Ilaiyaraaja friendship

அவர்களுக்குள் எவ்வளவோ மனக்கசப்புகள் இருந்தாலும், லீகல் நோட்டீஸ் விவகாரங்கள் இருந்தாலும் நேர்ல பாத்துக்கிட்டாங்க. கட்டிப்பிடிச்சுட்டாங்க முடிஞ்சு போச்சு… ரெண்டு பேருமே அதுகப்புறம் பிரச்சனையைப் பத்தி பேசிக்கவே இல்ல.  அதுதான் அவங்களுக்குள்ள இருக்குற பிணைப்பு. புரிதல்…எங்க விட்டாங்களோ அங்க இருந்து மறுபடியும் தொடர்ந்து செல்லும்.” எனக் கூறியுள்ளார்.

Also Read | "கண்டிப்பா வரணும்.." முதல்வருக்கு திருமண Invitation கொடுத்த விக்னேஷ், நயன்.. வைரலாகும் ஃபோட்டோ

தொடர்புடைய இணைப்புகள்

Charan talked emotionally SPB Ilaiyaraaja friendship

People looking for online information on Charan, Ilaiyaraaja, SP Balasubrahmanyam, SPB will find this news story useful.