‘AK 61’ செட்டில் அஜித்துடன் பிரபல நடிகை…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Actress nayana sai shared viral pic with ajith

Also Read | “உள்குத்தும் இருக்கு… Open குத்தும் இருக்கு…” BB ஜோடிகள் அரங்கை தெறிக்கவிட்ட கமலின் பதில்

மூன்றாவது முறையாக இணைந்த கூட்டணி

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த இரு படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கியது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது தற்காலிகமாக ‘அஜித் 61’ என அழைக்கப்பட்டு வருகிறது.

Actress nayana sai shared viral pic with ajith

படப்பிடிப்பு…

அதையடுத்து படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அஜித் 61 படம் ஒரு வங்கி சம்மந்தமான பிரச்சனையை மையமாகக் கொண்ட படம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சமுத்திரக்கனி மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோர் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் சாரபட்டா புகழ் ஜான் கொக்கன் உள்ளிட்டவர்களும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Actress nayana sai shared viral pic with ajith

அஜித் லேட்டஸ்ட்…

இந்நிலையில் நடிகை நயனா சாய் அஜித்துடன் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தோடு “Fangirl moment…நான் அஜித் சாரை திரையில் பார்த்து வளர்ந்தவள். என்றாவது ஒருநாள் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்த கனவு நனவாகும் தருணத்தை எப்போதும் போற்றுவேன்.” என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress nayana sai shared viral pic with ajith

Also Read | அரவிந்த் சாமி & ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’… VJS வெளியிட்ட மிரட்டலான டீசர்…

தொடர்புடைய இணைப்புகள்

Actress nayana sai shared viral pic with ajith

People looking for online information on Ajithkumar, AK 61, Boney kapoor, Nayana sai will find this news story useful.