மறுமணம் செய்த இசையமைப்பாளர் D. இமான்.. செம வைராலாகும் திருமண புகைப்படம்! பொண்ணு இவங்க தானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019 ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய அளவில் மிக உயர்ந்த சினிமா விருதான தேசிய விருதை விஸ்வாசம் படத்திற்காக இசையமைப்பாளர் இமான் பெற்றிருந்தார்.

music director D. Imman has tied the knot with Amelie and photos

2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானார். ‘கிருஷ்ணதாசி’ எனும் சன் டிவி சீரியலில் ஏற்கனவே இசைய்மைத்து மெகா சீரியலில் அறிமுகமானவர். கோலங்கள் போன்ற சீரியல்களிலும் இசையமைத்துள்ளார். மைனா, கும்கி படங்களின் வெற்றி இவரை முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியது.

music director D. Imman has tied the knot with Amelie and photos

கடைசியாக அண்ணாத்த, லாபம், எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  2008 ஆம் ஆண்டு ஏப்ரல் - 24 அன்று கணினிப் பொறியாளர் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னை நுங்கம்பாக்கம் கதீட்ரல் தேவாலயத்தில் இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

music director D. Imman has tied the knot with Amelie and photos

டி. இமான் தனது மனைவியை சில மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்தார். விவாகரத்து குறித்து டி. இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார். அதில் "எனது நலம் விரும்பிகள் மற்றும் இசை ஆர்வலர்கள், ஆதரவாக இருந்தவர்கள் அனைவருக்கும் நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வாழ்க்கை, வெவ்வேறு வழிகளில் நம்மை அழைத்துச் செல்கிறது, மோனிக்கா ரிச்சர்ட் மற்றும் நான் நவம்பர் 2020 முதல் பரஸ்பர ஒப்புதலின் மூலம் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டோம், இனி நாங்கள் கணவன் மனைவி இல்லை. எங்களின் அனைத்து நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் எங்கள் தனியுரிமையை எங்களுக்கு அளித்து, இதில் இருந்து முன்னேற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதல், அன்பு மற்றும் ஆதரவுக்கு மிக்க நன்றி -டி.இமான்" என குறிப்பிட்டு இருந்தார்.

music director D. Imman has tied the knot with Amelie and photos

இந்நிலையில் இமான், பிரபல கலை இயக்குனர் உபல்டின் மகளான அமிலியை மறுமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்தது. இந்த விழாவில் பாடகர் கிரிஷ் மற்றும் அவரது மனைவி சங்கீதா, மூத்த நடிகை மற்றும் தயாரிப்பாளரான குட்டி பத்மினி உட்பட பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Tags : D Imman, DImman

தொடர்புடைய இணைப்புகள்

music director D. Imman has tied the knot with Amelie and photos

People looking for online information on D Imman, DImman will find this news story useful.