www.garudabazaar.com

ஹரீஷ் கல்யாணுடன் ஜோடி சேரும் அதுல்யா ரவி..! ‘இவர்’ தான் இயக்குநர்! ‘மியூசிக்’ யார்னு பாருங்க!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் நடிகை அதுல்யா ரவி இணைந்து நடிக்கும் அடுத்த படத்துக்கான பூஜை விழா நடைபெற்றுள்ளது. 

Harish kalyan athulya ravi next movie poojai D Imman musical

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஹரீஷ் கல்யாண் அதன் பிறகு பியார் பிரேமா காதல், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், தாரள பிரபு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.  அண்மையில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கி நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் வெளியான ‘கசடதபற’ திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தார்.

Harish kalyan athulya ravi next movie poojai D Imman musical

இதேபோல், அண்மையில் சாந்தனு நடித்து கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி வெளியன முருங்கைக் காய் சிப்ஸ் படத்தில் சாந்தனுவுடன் இணைந்து அதுல்யா ரவி நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை thirdeye entertainment மற்றும் sp cinema தயாரிக்கிறது.

Harish kalyan athulya ravi next movie poojai D Imman musical

இயக்குநர் சண்முகம் முத்துசாமி, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ‘அடங்காதே’ திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தின் வெளியீடு அடுத்து நிகழும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Harish kalyan athulya ravi next movie poojai D Imman musical

இதேபோல், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், ஜீ ப்ளெக்ஸ் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆன க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் வசனப் பணிகளை செய்தவர் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.

Harish kalyan athulya ravi next movie poojai D Imman musical

இந்நிலையில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி இணையும் இந்த படத்தின் பூஜையில் இயக்குநர் சேரன், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, இந்த திரைப்படம் வெற்றிடயடைய வாழ்த்தினர்.

Harish kalyan athulya ravi next movie poojai D Imman musical

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Harish kalyan athulya ravi next movie poojai D Imman musical

People looking for online information on Athulya Ravi, D Imman, D.Imman, Harish Kalyan, Shanmugam Muthusamy will find this news story useful.