வுட்றா வண்டிய அங்க..- விஜய் சேதுபதி-நயன்தாரா பட லான்ச்சுக்கு பின் விக்னேஷ் சிவனின் செம செயல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்துவாக்குல ரெண்டு காதல் பட அறிவிப்பை அடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் சபரிமலையில் இருக்கும் போட்டோவை பதிவிட்டு, ஒரு முக்கிய அறிவிப்பை பகிர்ந்துள்ளார்.   

vijay sethupathi nayanthara samantha kaathuvaakula rendu kaadhal thanks giving by vignesh sivan

நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் தற்போது இயக்கவுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சபரி மலையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சிறப்பாக லான்ச் ஆனதற்கு நன்றி செலுத்தும் விதமாக அவர் சபரி மலைக்கு சென்றுள்ளார். மேலும் சபரி மலை தன்னை அடிக்கடி வர செய்யும் அளவுக்கு அடிக்டிவ்வாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor