''போலீஸ் அப்பாவோட போலீஸ் விளையாட்டு'' - பிரபல ஹீரோ பகிர்ந்த ஃபோட்டோ வைரல்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 'மோகன்தாஸ்' பட டைட்டில் அறிவிப்பு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷ்ணு விஷால் தயாரிக்கும் இந்த படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி கேஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறு வயதில் அப்பாவுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் போலீஸ் உடையில் உள்ளனர். அந்த பதிவில், ''பல வருடங்களுக்கு முன்... அப்பாவுடன் போலீஸ், போலீஸ் விளையாட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 'இன்று நேற்று நாளை 2' , 'எஃப்ஐஆர்', 'காடன்' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் 'எஃப்ஐஆர்' படத்தின் எடிட்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்த படத்தின் எடிட்டர் ஜிகே பிரசன்னா அறிவித்திருந்தார்.