www.garudabazaar.com

ரஷ்யா செல்லும் அல்லு அர்ஜூன் & ராஷ்மிகா.. ஏன்? அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் & ராஷ்மிகா மந்தனா ரஷ்யா செல்கின்றனர்.

Allu Arjun Rashmika Mandanna Pushpa The Rise Russia Release

Also Read | பொங்கலுக்கு ரிலீஸாகும் 'துணிவு'.. H .வினோத் போட்டோவுடன் வெளிவந்த லேட்டஸ்ட் டபுள் அப்டேட்!

சமீபத்தில் பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா'  படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளது.

Allu Arjun Rashmika Mandanna Pushpa The Rise Russia Release

புஷ்பா : தி ரைஸ் பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.  இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

இந்நிலையில் இந்த படம், ரஷ்ய மொழியில் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள அல்லு அர்ஜூன் & ராஷ்மிகா மந்தனா ரஷ்யா செல்கின்றனர். மேலும் இந்த படத்தின் சிறப்புக் காட்சிகள் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி மாஸ்கோ நகரிலும், டிசம்பர் 3 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புஷ்பா படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

Allu Arjun Rashmika Mandanna Pushpa The Rise Russia Release

அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.  இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. பூஜையில் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுகுமார் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை, நடிகர்கள் தேர்வு சில நாட்களுக்கு முன் திருப்பதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது.  நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், போஸ்டர் வடிவமைப்பாளர் டியூனி ஜான், போட்டோகிராபர் அவினாஷ் கவுரிகர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

 

Also Read | போடு! வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. TV உரிமத்தை கைப்பற்றிய முன்னணி சேனல்!

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun Rashmika Mandanna Pushpa The Rise Russia Release

People looking for online information on Allu Arjun, Pushpa The Rise, Pushpa The Rise Movie update, Rashmika Mandanna will find this news story useful.