www.garudabazaar.com

வாரிசு பட ரஞ்சிதமே பாடலுக்கு ரீல்ஸ் பண்ண போகும் ராஷ்மிகா..? வைரலாகும் Post!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Rashmika Mandanna Recent Instagram Story about Ranjithame Reels

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

Rashmika Mandanna Recent Instagram Story about Ranjithame Reels

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Rashmika Mandanna Recent Instagram Story about Ranjithame Reels

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். உடற்பயிற்சி செய்த பின் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து, ரஞ்சிதமே பாடலுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்யவா? வேண்டாமா?என ரசிகர்களிடம் ராஷ்மிகா வாக்கெடுப்பு நடத்தி வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna Recent Instagram Story about Ranjithame Reels

People looking for online information on Ranjithame, Rashmika Mandanna, Varisu, Vijay will find this news story useful.