www.garudabazaar.com

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா-2.. ஷூட்டிங் இந்த நாட்லயா? எப்போ? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

Allu Arjun Pushpa The Rule Movie Shooting Update

Also Read | முத்தையா இயக்க ஆர்யா நடிக்கும் புதிய படம்.. டைட்டில் இதுவா? வேறமாரி 🤩

சமீபத்தில் பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' படத்தில் நடித்து புகழ்பெற்றவர். இந்த படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Allu Arjun Pushpa The Rule Movie Shooting Update

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா : தி ரைஸ் பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது.  இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

Allu Arjun Pushpa The Rule Movie Shooting Update

அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.  இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. பூஜையில் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுகுமார் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை, நடிகர்கள் தேர்வு சில நாட்களுக்கு முன் திருப்பதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது.  நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், போஸ்டர் வடிவமைப்பாளர் டியூனி ஜான், போட்டோகிராபர் அவினாஷ் கவுரிகர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி ஐத்ராபாத்தில் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் காடுகளில் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் துவங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேங்காக் படப்பிடிப்பில் பெரிய அளவில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

Also Read | சர்தார் வெற்றி.. இயக்குனர் மித்ரனுக்கு பரிசளித்த விலையுயர்ந்த கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun Pushpa The Rule Movie Shooting Update

People looking for online information on Allu Arjun, Pushpa The Rule, Pushpa The Rule Movie Shooting Update will find this news story useful.