www.garudabazaar.com

"இந்திய சினிமால இப்டி நடந்ததில்ல போல".. 'புஷ்பா 2' படத்துக்காக ரசிகர்கள் செஞ்ச விஷயம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு திரைப்படங்கள் மூலம் அதிக பிரபலமான அல்லு அர்ஜுனுக்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கூட ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

Allu arjun fans ask pushpa 2 update with banner all regions

Also Read | "நான் வண்டி ஒட்டிட்டு போறப்போ, Checkingல இருக்குற போலீஸ் வந்து".. GVM பகிர்ந்த சீக்ரெட்ஸ்!!

அதிலும் குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி இருந்த 'புஷ்பா' திரைப்படம், இந்திய அளவிலும் டாப் ஹீரோக்களில் ஒருவராக அல்லு அர்ஜுனை உயர்த்தி இருந்தது.

பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி இருந்த புஷ்பா திரைப்படம், பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'புஷ்பா' திரைப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், சுனில், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

Allu arjun fans ask pushpa 2 update with banner all regions

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகவும் புஷ்பா வெளியாகி இருந்த நிலையில், இதன் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. புஷ்பா : தி ரைஸ் பாகம் - 1 திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்ததால் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

Allu arjun fans ask pushpa 2 update with banner all regions

அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு, அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.  இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. பூஜையில் படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுகுமார் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்கள் எதுவும் வராததால் ரசிகர்களும் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஒரு சூழலில் புஷ்பா 2 அப்டேட்டிற்காக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் செய்த விஷயம், சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது.

Allu arjun fans ask pushpa 2 update with banner all regions

பொதுவாக ஒரு நடிகரின் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்ட் செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் அதை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளனர் அல்லு அர்ஜுன் ரசிகர்கள். விசாகப்பட்டினம், மகாராஷ்டிரா, வராங்கல், கேரளா, UAE உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இணைந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் அப்டேட் கேட்டபடி இருக்கும் பேனர்களுடன் பொது இடங்களில் அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Allu arjun fans ask pushpa 2 update with banner all regions

இந்திய சினிமா வரலாற்றில் ஒரு நடிகருக்காக முற்றிலும் வேறு விதமாக ரசிகர்கள் அப்டேட் கேட்ட விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | பேரிழப்பு.. "அவரு கூட 3 படம் நடிச்சது".. நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உருக்கம்.!

தொடர்புடைய இணைப்புகள்

Allu arjun fans ask pushpa 2 update with banner all regions

People looking for online information on Allu Arjun, Allu arjun fans, Pushpa The Rise will find this news story useful.