www.garudabazaar.com

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா-2.. படத்தில் இணைந்த பிரபல முன்னணி தமிழ் சினிமா TECHNICIAN!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

Allu Arjun Pushpa The Rule First Look Poster Making Photoshoot

Also Read | PAN INDIA லெவலில் சமந்தா நடிக்கும் 'யசோதா'.. பட ரிலீஸ் எப்போ? தாறுமாறான அப்டேட்

சமீபத்தில் பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' படத்தில் நடித்து புகழ்பெற்றவர். இந்த படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Allu Arjun Pushpa The Rule First Look Poster Making Photoshoot

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Allu Arjun Pushpa The Rule First Look Poster Making Photoshoot

புஷ்பா : தி ரைஸ் பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது.  இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.  இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. பூஜையில் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுகுமார் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை, நடிகர்கள் தேர்வு சில நாட்களுக்கு முன் திருப்பதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Allu Arjun Pushpa The Rule First Look Poster Making Photoshoot

இந்நிலையில் இந்த படத்தின் போட்டோ ஷூட் நடைபெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், போஸ்டர் வடிவமைப்பாளர் டியூனி ஜான், போட்டோகிராபர் அவினாஷ் கவுரிகர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இதன் மூலம் விரைவில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also Read | Baakiyalakshmi : "கோபி மனைவி மேடைக்கு வாங்க"... உச்சக்கட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி.. செம்ம ட்வீஸ்ட்!

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun Pushpa The Rule First Look Poster Making Photoshoot

People looking for online information on Allu Arjun, Allu Arjun Pushpa The Rule, Pushpa The Rule, Pushpa The Rule First Look Poster will find this news story useful.