www.garudabazaar.com

போடு! வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. TV உரிமத்தை கைப்பற்றிய முன்னணி சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.

Vadivelu Naai Sekar Returns Movie Satellite TV Rights

Also Read | பிரபல OTT-யில் REMASTERED செய்யப்பட்டு ரிலீஸாகும் 'வாரணம் ஆயிரம்'.. எப்போ? எதுல?

இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா  சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.  சென்னை மற்றும் மைசூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினார். சில நாட்களுக்கு முன் இந்த புகைப்படங்கள் வைரலாகின.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல 'திங்க் மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | BIGGBOSS: ஏலியன் காட்டுவாசி டாஸ்க்.. ஆத்திரமடைந்து வீட்டை அடித்து நொறுக்கிய ஆயிஷா!

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu Naai Sekar Returns Movie Satellite TV Rights

People looking for online information on Naai Sekar Returns, Naai sekar Returns movie Updates, Vadivelu will find this news story useful.