Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

மனைவியின் பிறந்தநாளுக்கு செம ட்ரீட் கொடுத்த அல்லு அர்ஜூன்! எங்க போயிருக்காரு பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்லு அர்ஜூன் தனது மனைவியின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார்.

Allu Arjun wife Sneha Reddy birthday celebration at Amritsar Golden Temple

Also Read | திருப்பதியில் கமல்ஹாசனை காண திரண்ட ரசிகர்கள்.. வைரலாகும் இந்தியன்-2 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

சமீபத்தில் பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' படத்தில் நடித்து புகழ்பெற்றவர். இந்த படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது.

Allu Arjun wife Sneha Reddy birthday celebration at Amritsar Golden Temple

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Allu Arjun wife Sneha Reddy birthday celebration at Amritsar Golden Temple

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Allu Arjun wife Sneha Reddy birthday celebration at Amritsar Golden Temple

புஷ்பா : தி ரைஸ் பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது.  இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

Allu Arjun wife Sneha Reddy birthday celebration at Amritsar Golden Temple

இந்நிலையில் அல்லு அர்ஜூன் தனது மனைவி சினேகா ரெட்டியின் பிறந்தநாளை பஞ்சாப்பில் கொண்டாடினார். பிரபல நட்சத்திர விடுதியில் கேக் வெட்டிக் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். பின்னர் குடும்பத்துடன் அமிர்தசரஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற பொற்கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று அங்கு பல்வேறு சடங்குகளில் பங்கெடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும் வாகா எல்லையில் உள்ள புகழ்பெற்ற எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தேசிய கொடி அவிழ்க்கும் நிகழ்வை குடும்பத்துடன் கண்டுகளித்தார். மேலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார்.

Allu Arjun wife Sneha Reddy birthday celebration at Amritsar Golden Temple

அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.  இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. பூஜையில் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுகுமார் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை, நடிகர்கள் தேர்வு சில நாட்களுக்கு முன் திருப்பதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | தாவணியில் அசத்திய அதிதி ஷங்கர்.. நவராத்திரியை முன்னிட்டு பிரபல ஃபோட்டோ கிராபருடன் PHOTOSHOOT!

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun wife Sneha Reddy birthday celebration at Amritsar Golden Temple

People looking for online information on Allu Arjun, Allu Arjun wife Birthday celebration, Amritsar golden temple, Sneha Reddy, Sneha Reddy birthday celebration will find this news story useful.