Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

"இவங்க தான் என் அம்மா அப்பா தங்கச்சி".. குடும்பத்தை அறிமுகம் செய்த ராஷ்மிகா மந்தனா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஷ்மிகா மந்தனா தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

Rashmika Mandanna with her family members viral photo

Also Read | தமிழ் சினிமா வசூல் சாதனைகளை அமெரிக்காவில் முறியடித்த PS1! இம்புட்டு கோடியா?

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில்  "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

Rashmika Mandanna with her family members viral photo

ராஷ்மிகா மந்தனா & அமிதாப் பச்சன் நடிக்கும் 'குட்பாய்' படம் வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இது என் நிஜ குடும்பம்.. ரீல் குடும்பத்தை இன்னும் 3 தினங்களில் திரையரங்குகளில் காணலாம் " என பதிவிட்டுள்ளார்.

Rashmika Mandanna with her family members viral photo

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில்  3.36 கோடி ரசிகர்கள் பின் தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

 

Also Read | அப்போ இந்தி ரீமேக்-ல கேமியோ Role.. இப்போ இந்தி-ல ஒரு மாஸ் படம்! நெகிழும் அட்லி ரசிகர்கள்..

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna with her family members viral photo

People looking for online information on Rashmika Mandanna, Rashmika Mandanna with her family Photo will find this news story useful.