தளபதியின் 'மாஸ்டர்', பிரபல நடிகர் கமெண்ட் - ''உன்ன கோர்த்து விட விரும்பல, நல்லா வாடா''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் - விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

Thalapathy Vijay, Vijay Sethupathi's Master, Prasanna Comments to Shanthnu about Master Update

'கைதி' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு லோகேஷ் கனகராஜூடன் விஜய் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய , அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படம் குறித்து அவ்வப்போது நடிகர் ஷாந்தனு செய்து வருகிறார். அதில், ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசன்னா, பாக்யராஜ் ஷாந்தனுவிடம் பேசுவது போல பேசி, மாஸ்டர் அப்டேட் கேட்கிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்த ஷாந்தனு, ''கியூட், மச்சி பிரசன்னா, நான் ஃபோன் பண்ணி அப்டேட் சொல்கிறேன் என்று சொல்ல, அதற்கு பிரசன்னா, செல்லாது, செல்லாது இங்கயே இப்போவே சொல்லு'' என்கிறார். அதற்கு பதிலளிக்கும் ஷாந்தனு, ''இங்கயே இப்போவே சொன்ன, இங்கயே, இப்போவே எனக்கு இருக்குற பேலன்ஸ் ஷூட்டிங் டேய்ஸ் கேன்சல் ஆகும்'' என சொல்ல, அதற்கு பிரசன்னா, ''இதுக்கு மேல உன்ன கோர்த்து விட விரும்பல, நல்லா வாடா'' என்கிறார்.

Entertainment sub editor