'இதுதான் கடைசி'... அர்ஜுன் ரெட்டி ஹீரோவின் ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

vijay devarakonda rashi kanna's world famous lover trailer is out

தெலுங்கு திரையுலகில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி தெலுங்கு மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும் அர்ஜுன் ரெட்டி படம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை காட்சியை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஜய் தேவரகொண்டா, இதுதான் என் கடைசி காதல் படமாக இருக்கும் என்று எனக்கு தெரியும், அதனால் தான் மொத்தமாக சேர்த்து இதில் கொடுத்திருக்கிறேன்' என பதிவிட்டுள்ளார். இத்திரைப்படத்தில் ராஷி கன்னா, ஐஷ்வர்யா ராஜேஷ், இசபெல்லா, கேத்ரீன் தெரசா ஆகிய நான்கு ஹீரோயின்களுடன் காதலில் கலக்குகிறார் விஜய் தேவரகொண்டா.

'இதுதான் கடைசி'... அர்ஜுன் ரெட்டி ஹீரோவின் ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்! வீடியோ

Entertainment sub editor