சூப்பர் ஸ்டாரோட தர்பாருடன் தன் படம் ரிலீஸ் ஆவது குறித்து அல்லு அர்ஜூன் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 07, 2020 01:02 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தர்பார் திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் தனது Ala Vaikunthapurramuloo படம் பற்றி ஹீரோ அல்லு அர்ஜூன் பேசும் போது சூப்பர் ஸ்டாரின் தர்பார் குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் சார் எனக்கு ரோல் மாடல், ஒரு இன்ஸ்பிரேஷன். ரஜினிகாந்த் சாரோட படம் தர்பார் ரிலீஸ் ஆகுது. என்னுடைய விருப்பமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர்கள் தமிழில் இருந்து தெலுங்கில் படம் ரிலீஸ் செய்ய போகிறார்கள். சார், தெலுங்கு சினிமா சார்பாக உங்களை வரவேற்கிறோம். இந்த சங்கராந்தியில் உங்களது படமும் வெற்றி பெற வேண்டும்
#Thalaivar #SuperstarRajinikanth Inspires #StylishStar #AlluArjun! He Also Says #Superstar Is His Role Model 👌🏻🎉😎🔥💪🏼❤️
Wishing @alluarjun All The Best For #AlaVaikunthapurramuloo, Looks Promising 🤗@rajinikanth #DarbarSankranti #AlaVaikunthapurramulooOnJan12th pic.twitter.com/Vbj4ey2vKV
— RIAZ K AHMED (@RIAZtheboss) January 7, 2020