பிரபல ஹீரோவுக்கு சித் ஸ்ரீராம் பாடிய லேட்டஸ்ட் ஹிட் பாட்டை ஸ்கூலுக்கு பாடிச் சென்ற சிறுமி!
முகப்பு > சினிமா செய்திகள்மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் இடம்பெறும் ‘அடியே..’ பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானால் திரையுலகிற்கு அறிமுகப் படுத்தப் பட்டவர் சித் ஸ்ரீராம். தொடர்ந்து 'ஐ', 'நானும் ரவுடி தான்' படங்களில் பாடிய சித்துக்கு, கெளதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம்பெற்ற அச்சம் ‘தள்ளிப் போகாதே’ பாடல் பெரும் புகழைத் தேடித்தந்தது.

தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பிசியான் சித் ஸ்ரீராம் அடுத்ததாக ’கீதா கோவிந்தம் படத்தில் பாடிய ’இன்கேம் இன்கேம் கவலே…’ பாடல் தெலுங்கு மாநிலங்களை தாண்டி தமிழ் ரசிகர்களின் ரிங் டூனாகவும் மாறியது. தற்போது உருவாகிவரும் பெரிய ஹீரோ படங்களில் சித் ஸ்ரீராமின் குரல் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ’அலா வைகுந்தபுரமுலோ’ படத்தில் பாடிய ’சாமஜவரகமணா’ அனைவரும் விரும்பும் மெலடியாக மாறிவுள்ளது. இந்த பாடல் தன் பள்ளி வேனில் ஓடுவதை கேட்ட சிறுமி தானும் உடன் பாடிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது. இதையடுத்து இந்த பாடலுக்கு இசையமைத்த தமன் இந்த வீடியோவை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Wow !! ♥️♥️♥️♥️ happy time be the rhyme #sensationalsamajavaragamana 💞💞 https://t.co/JxgFYw8k31
— thaman S (@MusicThaman) January 30, 2020