பிரபல ஹீரோயின் வெளியிட்ட வீடியோ: 'இப்படி உங்கள பார்க்க விரும்பல'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்லு அர்ஜூன் நடிப்பில் பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியான 'அல வைக்குந்தபுரமுலோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் எழுதி இயக்கியுள்ளார்.

Allu Arjun's Ala Vaikunthapurramloo heroine Pooja Hegde shares a video about her fan

இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்க, சமுத்திரக்கனி, ஜெயராம் , தபு, முரளி சர்மா, நவதீப், ரோகினி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.  இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகருடன் உரையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், பாஸ்கர் ராவ் பாம்பே வந்து 5 நாட்கள் வரை காத்திருந்ததற்கு நன்றி. ஆனால் என் ரசிகர்கள் என்னை காண்பதற்கு கஷ்டப்படுவதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. மேலும் சாலையில் தூங்கி கஷ்டப்படும் போது நான் உங்களை காண விரும்பவில்லை.  நீங்கள் தான் என்னுடைய பலம் என்று குறிப்பிடுள்ளார்.

Entertainment sub editor