www.garudabazaar.com

செல்பி எடுப்பதில் கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்ஷய் குமார்.. வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் செல்ஃபி எடுப்பதில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Akshay Kumar breaks Guinness World Record for most selfies taken

Images are subject to © copyright to their respective owners.

Also Read | உதவிக்காக காத்திருந்த மக்கள்.. களத்தில் நடிகர் சோனுசூட்.. நெகிழ்ச்சி வீடியோ..!

பாலிவுட் உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் அக்ஷய் குமார். சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதில் அதிகளவில் ஆர்வம் காட்டும் அக்ஷய் குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'டிரைவிங் லைசன்ஸ்' எனும் படத்தின் இந்தி ரீமேக்கான செல்ஃபி திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி, மிருனாள் தாக்கூர், டயானா பெண்டி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்தத் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அக்ஷய் குமார் அப்போது தனது ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

Akshay Kumar breaks Guinness World Record for most selfies taken

Images are subject to © copyright to their respective owners.

அதாவது 3 நிமிடங்களில் 184 செல்ஃபிக்களை எடுத்திருக்கிறார் அக்ஷய் குமார். இதன் மூலம் கின்னஸ் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.  இதனையடுத்து கின்னஸ் சான்றிதழுடன் ரசிகர்கள் சூழ நிற்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷய் பகிர்ந்துள்ளார்.

Akshay Kumar breaks Guinness World Record for most selfies taken

Images are subject to © copyright to their respective owners.

அந்த பதிவில்,"என் வாழ்வில் நான் சாதித்தது மற்றும் என்னிடம் இருக்கும் எல்லாமே எனது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பினால் கிடைத்தவை தான். எனது வாழ்க்கை முழுவதும் அவர்கள் எப்படி எனக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இது அவர்களுக்கான என் சிறப்பு பரிசு. எனது ரசிகர்களின் உதவியால் 3 நிமிடங்களில் அதிக செல்ஃபி எடுத்தவர் என்ற கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளோம். அனைவருக்கும் நன்றி. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இதை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | நம்ம டில்லியின் 16 வருட திரைப்பயணம்.. லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த Viral புகைப்படம்..

தொடர்புடைய இணைப்புகள்

Akshay Kumar breaks Guinness World Record for most selfies taken

People looking for online information on Akshay Kumar, Akshay Kumar breaks Guinness World Record, Guinness World Record will find this news story useful.