www.garudabazaar.com
iTechUS

"வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன்".. மோகன்லால் உடனான DANCE குறித்து அக்ஷய் குமார் நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்லால் & அக்ஷய் குமார் திருமண நிகழ்வில் நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Mohanlal Dancing with Akshay Kumar in Wedding Function at Rajasthan

Images are subject to © copyright to their respective owners.

Also Read | திருமண நாளில் மகேஷ் பாபு குறித்து பதிவிட்ட நம்ரதா.. என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க

லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் மோகன்லால் தற்போது த வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. 

இந்த படத்திற்கு "மலைக்கோட்டை வாலிபன்" என தமிழில் பெயரிடப்பட்டுள்ளது.   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்திலும் மோகன்லால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடைபெற்று வருகிறது.

Mohanlal Dancing with Akshay Kumar in Wedding Function at Rajasthan

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் ஏசியா  நெட் தொலைக்காட்சி சேனல் அதிகாரி கௌதம் மாதவனின் இல்லத் திருமணவிழா ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் நடிகர் மோகன்லால், அக்ஷய் குமார், கமல்ஹாசன், அமீர் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Mohanlal Dancing with Akshay Kumar in Wedding Function at Rajasthan

Images are subject to © copyright to their respective owners.

இந்த விழாவில் மோகன்லால் & அக்ஷய் குமார் இருவரும் இணைந்து பாங்ரா ஸ்டைலில் நடனம் ஆடினர். இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு அக்ஷய் குமார், "என் வாழ்வின் மறக்க முடியாத தருணம் இது." என ட்வீட் செய்துள்ளார்.

Mohanlal Dancing with Akshay Kumar in Wedding Function at Rajasthan

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு பதில் அளித்த மோகன் லால், "நண்பர் கௌதம் மாதவனின் இல்லத் திருமணவிழாவில் ஒன் & ஒன்லி நடிகர் அக்ஷய் குமாருடன் நடனம் ஆடிய தருணம்" என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு டிரெண்டாகி வருகிறது.

Also Read | "நல்ல படமா எடுத்துருக்காங்க".. DADA படம் பார்த்த பின் H. வினோத் சொன்ன REVIEW!

தொடர்புடைய இணைப்புகள்

Mohanlal Dancing with Akshay Kumar in Wedding Function at Rajasthan

People looking for online information on Akshay Kumar, Kamal Haasan, Mohan Lal, Rajasthan will find this news story useful.