Oh My Dog
Anantham
www.garudabazaar.com

சுதா கொங்கராவின் அடுத்த படம்…’Title இருந்தா சொல்லுங்க”… அக்ஷய் குமார் பகிர்ந்த தெறி வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

Sudha kongara akshay kumar movie shoot started

Also Read  | JUNIOR ARTIST-அ 250ரூ சம்பளம்..இப்போ கோடில சம்பளம்.. அதுக்கு காரணம் இதான்! விஜய் சேதுபதி EXCLUSIVE பேட்டி!

அடுத்தடுத்த ஹிட்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் இயக்கிய துரோகி, இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவரின் மூன்றாவது படமாக சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து சுதா கொங்கரா முன்னணி நடிகர்களின் படங்களை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Sudha kongara akshay kumar movie shoot started

சூரரைப் போற்று ரீமேக்…

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை அடுத்து அந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். கதாநாயகியாக ராதிகாமடன் நடிக்கிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதை நடிகர் அக்ஷய்குமார் சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Sudha kongara akshay kumar movie shoot started

வைரல் வீடியோ…

இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் சுதா கொங்கரா, அக்ஷய் குமார் மற்றும் ராதிகா ஆகியோர் இருக்க, ராதிகா தேங்காய் உடைத்து ஷூட்டிங்கை தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த வீடியோவோடு “தேங்காய் உடைக்கும் நிகழ்வோடு, எங்கள் இதய பிராத்தனைகளையும் கொண்டு இன்னும் பெயரிடப்படாத படத்தைத் தொடங்குகிறோம். உங்கள் மனதில் ஏதாவது டைட்டில் இருந்தால் பகிருங்கள்.  உங்களின் வாழ்த்துகள் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Sudha kongara akshay kumar movie shoot started

சுதா கொங்கராவின் அடுத்தடுத்த படங்கள்…

KGF 2 மூலம் கவனம் பெற்ற ஹோம்பாலே நிறுவனம் அந்த படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்த படமும் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இதையடுத்து தற்போது அந்த நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க ’இறுதிச் சுற்று’ மற்றும் ’சூரரைப் போற்று’ திரைப்படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

சுதா கொங்கராவின் அடுத்த படம்…’TITLE இருந்தா சொல்லுங்க”… அக்ஷய் குமார் பகிர்ந்த தெறி வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sudha kongara akshay kumar movie shoot started

People looking for online information on Akshay Kumar, Akshay kumar new movie shoots, அக்ஷய் குமார், சுதா கொங்கரா, Sudha Kongara will find this news story useful.