www.garudabazaar.com

ரஜினிகாந்த் நடிப்பில் காந்தாரா - 2 படம்?.. இயக்குனர் ரிஷப் ஷெட்டி அளித்த வைரல் பதில்! TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் ரிஷப் ஷெட்டி பதில் அளித்துள்ளார்.

Rishab Shetty answer about Rajinikanth in Kantara 2

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இருக்காரா?.. கலகலப்பாக பதில் சொன்ன DADA கவின்

கன்னட மொழியில் உருவாகிய திரைப்படமான 'காந்தாரா' கடந்தாண்டு செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது.

காந்தாரா படம், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல  விமர்சனங்களைப் பெற்றது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும்  வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Rishab Shetty answer about Rajinikanth in Kantara 2

Images are subject to © copyright to their respective owners.

இந்த படம் தற்போது பிரபல அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி  வருகிறது.  இந்நிலையில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, நேற்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்  கலந்து கொண்டார். அப்போது அவரிடம், "காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாகவும், அவரை படத்தயாரிப்பாளர் அனுகியதாகவும் தகவல் வருதே?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரிஷப் ஷெட்டி, "இதெல்லாம் மீடியாக்கள் மூலம் கிளம்பும் தகவல்கள். எதுவாக இருந்தாலும்  படத்தயாரிப்பு நிறுவனம்  அறிவிப்பாளர்கள்". என ரிஷப் ஷெட்டி பதில் அளித்தார்.

Rishab Shetty answer about Rajinikanth in Kantara 2

Images are subject to © copyright to their respective owners.

காந்தாரா படத்தினை பார்த்த பிறகு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்தார். அதில், "தெரிந்ததை விட தெரியாதது அதிகம்" ஹோம்பலே பிலிம்ஸ் & கந்தாரா திரைப்படத்தை விட சினிமாவில் யாரும் இதை சிறப்பாக சொல்லியிருக்க முடியாது.

Rishab Shetty answer about Rajinikanth in Kantara 2

Images are subject to © copyright to their respective owners.

நீங்கள் என்னை புல்லரிக்க வைத்துவிட்டீர்கள் ரிஷப் ஷெட்டி. எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ரிஷப் உங்களுக்கு வாழ்த்துகள். இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பின் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துகள்" என ரஜினிகாந்த் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | விஷால் & SJ சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த திடீர் விபத்து.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rishab Shetty answer about Rajinikanth in Kantara 2

People looking for online information on Kantara, Rajinikanth, Rishab Shetty will find this news story useful.