Yaanai

மன்னர் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்த ‘சாம்ராட் பிரித்விராஜ்’… பிரபல ஓடிடியில் ரிலீஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சாம்ராட் பிரித்விராஜ்’ திரைப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

Akshay kumar latest movie ott release date announced

Also Read | விக்ரம் நடிக்கும் ’கோப்ரா’… ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமை… கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அக்ஷய்குமார்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி வருகின்றன. அவர் நடிப்பில் உருவாகி வரும் ரக்ஷா பந்தன். படம் ஆகஸ்ட் 11,2022 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அத்ரங்கி ரே படத்திற்கு பிறகு ரக்ஷா பந்தனில் அக்ஷய் குமார் - ஆனந்த் எல் ராய் கூட்டணி இணைந்துள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கிய தனு வெட்ஸ் மனு, அம்பிகாபதி உள்ளிட்ட படங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவையாக அமைந்தன.

Akshay kumar latest movie ott release date announced

ஓடிடி ரிலீஸ்

அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் ‘ரக்ஷா பந்தன்’ திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இதில் மன்னன் சாம்ராட் பிருத்விராஜ் வேடத்தில் அக்ஷய்குமார் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸான நிலையில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Akshay kumar latest movie ott release date announced

சூரரைப் போற்று ரீமேக்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ரிலீஸ் ஆன சூரரைப் போற்று திரைப்படம் தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த படத்தையும் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில்தான் சூர்யா இப்போது ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Also Read | “இது என் close friend சார்…” ராக்கெட்ரி ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா… கட்டியணைத்து வரவேற்ற Maddy

தொடர்புடைய இணைப்புகள்

Akshay kumar latest movie ott release date announced

People looking for online information on Akshay Kumar, Akshay kumar latest movie, OTT Release Update will find this news story useful.