www.garudabazaar.com

உதவிக்காக காத்திருந்த மக்கள்.. களத்தில் நடிகர் சோனுசூட்.. நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சோனு சூட் கோரிக்கையுடன் நிற்கும் பொது மக்களுக்கு உதவி செய்யும் வீடியோவை பிரபல தெலுங்கு நடிகர் பரமேஷ்வர் ஹிவ்ராலே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Parameshwar Hivrale shares video of Sonu sood helping people

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "பாலியல் தொழில் பண்றதே இதுனால தான்".. விவரங்களை அடுக்கும் Bakasuran லயா Exclusive

பஞ்சாப் மாநிலத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்த சோனு சூட், பொறியியல் படித்துவிட்டு மாடலிங் துறைக்குள் கால்பதித்தார். 1999-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான "கள்ளழகர்" என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக சோனு சூட் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நெஞ்சினிலே, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களின் மூலமாக மக்களிடையே பிரபலமானார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சோனு சூட், பிறருக்கு உதவுவதையும் தனது முக்கிய பணிகளில் ஒன்றாக செய்து வருகிறார்.

Parameshwar Hivrale shares video of Sonu sood helping people

Images are subject to © copyright to their respective owners.

கொரோனா சமயத்தில், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள் சொந்த ஊர் திரும்ப இலவச விமான பயணத்தை இவர் ஏற்பாடு செய்துகொடுத்தார். இதன்மூலம் நாடே சோனு சூட்டை பாராட்டியது. மேலும், உதவி வேண்டி பொதுமக்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தாலும் சோனு சூட் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Parameshwar Hivrale shares video of Sonu sood helping people

Images are subject to © copyright to their respective owners. 

இந்த சூழ்நிலையில் நடிகரும் இயக்குனருமான பரமேஷ்வர் ஹிவ்ராலே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சாலையில் பொதுமக்கள் கோரிக்கைகளுடன் நிற்க அவர்களுடன் சோனு சூட் உரையாடுகிறார். அவர்கள் கொடுத்த கடிதங்களை வாங்கி படிக்கும் சோனு, அதுகுறித்து மக்களிடையே பேசுகிறார். தொடர்ந்து அங்கிருந்த வயதானவர்களிடம் கலகலப்பாக பேசும் அவர், சிறுவர்கள் செல்பி எடுத்துக்கொள்ள அனுமதி கேட்க, புன்னகையுடன் சம்மதம் தெரிவித்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.

Parameshwar Hivrale shares video of Sonu sood helping people

Images are subject to © copyright to their respective owners.

இந்த வீடியோவின் கேப்ஷனில் சோனு சூட்டின் பிரபல வாசகமான,"என்னால் சமூகத்திற்கு கைம்மாறு செய்ய முடியவில்லை என்றால் நான் தவறான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்" என்பதையும் பரமேஷ்வர் ஹிவராலே குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | ரஜினிகாந்த் நடிப்பில் காந்தாரா - 2 படம்?.. இயக்குனர் ரிஷப் ஷெட்டி அளித்த வைரல் பதில்! TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Parameshwar Hivrale shares video of Sonu sood helping people

People looking for online information on Parameshwar Hivrale, Sonu Sood, Sonu sood helping people will find this news story useful.