”அந்த விழாவில் கலந்துக்க ஆசையா இருந்தேன்”…2வது முறை கொரோனா .. அக்ஷய் குமாரின் Tweet!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் இரண்டாவது முறையாக கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Akshay kumar viral tweet about cannes festival

Also Read | அருள்நிதி நடிக்கும் ‘தேஜாவு’ ரிலீஸ் Update… சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றிய பிரபல TV!

அக்ஷய் குமார்…

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவர் நடிப்பில் 2.0 மற்றும் அத்ராங்கி ரே ஆகிய படங்கள் தமிழிலும் வெளியாகி கவனத்தைப் பெற்றன. விரைவில் நடக்க உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் அவர் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் தற்போது கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Akshay kumar viral tweet about cannes festival

கேன்ஸ்விழாவும்… கொரோனா தொற்றும்…

இது சம்மந்தமான அவரது டிவீட்டில் “கேன்ஸ் விழாவின் இந்தியன் பெவிலியனில் எங்கள் திரைப்படத்தை திரையிட ஆர்வமாக இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல். படக்குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள். அங்கு இருக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.  இதையடுத்து ரசிகர்களும், சக கலைஞர்களும் அவர் சீக்கிரமே தொற்றில் இருந்து விடுபட்டு குணமாகி வரவேண்டும் என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.

Akshay kumar viral tweet about cannes festival

இரண்டாவது முறை…

அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏப்ரல் 2021 இல், அவர் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு முதல் முறையாக உள்ளானார். அப்போது அவர் பகிர்ந்த டிவீட்டில் . "இன்று காலையில், நான் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தேவையான மருத்துவ உதவியை நாடியுள்ளேன். அனைவரையும் நான் உண்மையாக கேட்டுக்கொள்கிறேன். என்னைத் தொடர்பு கொண்டவர்கள் தங்களைப் பரிசோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கூறியிருந்தார். அப்போது அவர் சிகிச்சையில் உடல்நலம் குணமாகி மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akshay kumar viral tweet about cannes festival

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Akshay kumar viral tweet about cannes festival

People looking for online information on Akshay Kumar, Akshay kumar tweet, அக்ஷய் குமார், Bollywood, Cannes festival will find this news story useful.