Veetla Vishesham Others Page USA

ஆரம்பம் பட ஸ்டைலில் அஜித்.. வைரலாகும் AK61 படத்தின் லேட்டஸ்ட் கெட் அப்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமாரின் புதிய AK61 பட கெட் அப் புகைப்படம் வெளியாகி உள்ளது.

Ajith Kumar Arrambam Style Getup for AK 61 Movie Latest Image

Also Read | வாங்க FRIEND கல்யாணத்துக்கு போவோம்.. செம வைரலாகும் கீர்த்தி சுரேஷின் PHOTOSHOOT!

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK 61 படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

Ajith Kumar Arrambam Style Getup for AK 61 Movie Latest Image

இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்ற உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார். மிலன் கலை இயக்குநராக பணிபுரிகிறார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Ajith Kumar Arrambam Style Getup for AK 61 Movie Latest Image

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் இன்று ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்குகிறது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ajith Kumar Arrambam Style Getup for AK 61 Movie Latest Image

இந்நிலையில் நடிகர் அஜித், சென்னை விமான நிலையத்தில் இருந்து புனேவுக்கு செல்லும் போது விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதே போல நடிகர் அஜித்குமாரின் புதிய கெட் அப் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் தாடியின் அமைப்பு மாற்றப்பட்டு சாம்பல் நிற உடையில் அஜித் உடல் எடை குறைந்து தோறறமளிக்கிறார்.

Also Read | திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த இயக்குனர் ஷங்கர்.. இதான் காரணமா? பின்னணி தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Arrambam Style Getup for AK 61 Movie Latest Image

People looking for online information on Ajith Kumar Arrambam Style Getup, Ajithkumar, AK 61 Movie, AK 61 Movie Latest Image will find this news story useful.