777 Charlie Trailer

அஜித் நடிக்கும் #AK61.. 47 நாள் இடைவிடாத படப்பிடிப்பு.. அடுத்தக்கட்ட ஷூட்டிங் இந்த ஊர்லயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தின் படப்பிடிப்பு தகவல் கிடைத்துள்ளது.

Ajith Kumar AK 61 Movie Second Schedule Shooting at Pune

Also Read | கிராமத்து தென்றலாக பிரியா பவானி சங்கர்.. திருச்சிற்றம்பலம் படத்தின் அசத்தலான புதிய MOTION POSTER!

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த மாதம் ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார்.

Ajith Kumar AK 61 Movie Second Schedule Shooting at Pune

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார்.

Ajith Kumar AK 61 Movie Second Schedule Shooting at Pune

இந்நிலையில், AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில்  ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்குகிறது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் கடைசி கட்ட படப்பிடிப்பு புனேயில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar AK 61 Movie Second Schedule Shooting at Pune

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில், பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஹிர்த்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா இந்தி ரீமேக்.. ரிலீஸ் எப்போ? வெளியான மாஸ் BTS போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK 61 Movie Second Schedule Shooting at Pune

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie Updates, AK61 will find this news story useful.