அஜித் நடிக்கும் #AK61 படத்தில் இணைந்த பிரபல இளம் ஹீரோ! போடு வெடிய.. வைரலாகும் செம்ம மாஸ் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்தின் AK61 வது படத்தில் பிரபல இளம் ஹீரோ இணைந்துள்ளார்.

AK 61 Movie Ajith Kumar Veera Images goes Viral on social media

Also Read | சமந்தா - ரன்வீர் சிங் திடீர் சந்திப்பு.. இதான் காரணமா? வைரல் போட்டோவுடன் பின்னணி தகவல்

கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK 61 Movie Ajith Kumar Veera Images goes Viral on social media

வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த மாதம் ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார்.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீரா, AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். வீரா, நடுநிசி நாய்கள், ராஜ தந்திரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

AK 61 Movie Ajith Kumar Veera Images goes Viral on social media

நடிகர் வீரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித்துடன் எடுத்த போட்டோவைப் பகிர்ந்துள்ளார். அதில், "இந்த மனிதருடன் சில நாட்கள் செலவழித்தேன், அவர் இருக்கும் இடத்தை அடைவதற்கு அழகான தோற்றம் மற்றும் ஒரு ஜென்டில்மேனாக இருப்பதை விட இன்னும் நிறைய தேவை என்பதை உணர முடிந்தது. இந்த ஒரு மனிதன் ஒரு நிகழ்வாக மாறுவதற்கு பல ஆண்டுகளுக்கான இரத்தம், வியர்வை, மரியாதை, கடின உழைப்பு, உந்துதல், ஒருமைப்பாடு மற்றும் தன்னம்பிக்கை  தேவைப்பட்டது.

AK 61 Movie Ajith Kumar Veera Images goes Viral on social media

அன்புள்ள ஏ.கே. சார், நீங்கள் என் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், நாம் ஒன்றாகக் கழித்த நாட்களில் நீங்கள் வாழ்ந்து என்னை வாழ அனுமதித்தீர்கள். நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன், உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நீங்கள் விரும்புவது இதுதான். லவ் யூ சார்! இது ஒரு மரியாதை. அன்புடன் வீரா" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | நடிகை சுனைனா தனி ஹீரோயினாக நடிக்கும் ஆக்சன் படம்.. வெளியான மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

AK 61 Movie Ajith Kumar Veera Images goes Viral on social media

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar recent photos, AK 61 Movie, AK 61 Movie Updates, Veera will find this news story useful.